Asianet News TamilAsianet News Tamil

மாதம் ரூ.5000! 100 பேரிடம் ஏல சீட்டு நடத்தி ஒரு குடும்பமே 1 கோடியே 31 லட்சம் மோசடி! புதுச்சேரியில் அதிர்ச்சி!

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஏல சீட்டு நடத்திய கோபி ஒரு சில பேருக்கு மட்டும் பணம் சரியான முறையில் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அடுத்தடுத்து மாதந்தோறும் பணம் செலுத்தி ஏலம் எடுத்தவர்களுக்கு பணத்தை வழங்காமல் கோபி இழுத்தடித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. 

family fraud by conducting auctions! Shock in Puducherry tvk
Author
First Published Apr 26, 2024, 11:16 AM IST

 மாதம் 5000 ரூபாய் என 100 பேரிடம் ஏல சீட்டு நடத்தி ஒரு குடும்பமே ஒரு கோடியே 31 லட்சம் மோசடி செய்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி அடுத்த சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ரத்தினம் என்கிற கோபி இவரது மனைவி முத்தாலம்மன். இவர்களது உறவினர்களான சுரேஷ், முரளி ஆகியோர் உதவியுடன் சஞ்சீவி நகர், புதுப்பாக்கம், துருவை, இரும்பை, ஆரோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200 பேரை ஏல சீட்டுக்கு சேர்த்துள்ளனர். ஏல சீட்டின் மொத்த தொகை இரண்டரை லட்சம் எனவும் தலா மாதம் 5 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று 100 பேரை சேர்த்து உள்ளனர். மேலும் இந்த ஏல சீட்டு மாதத்தில் நான்கு முறை அதாவது 5,7,10,15, ஆகிய தேதிகளில் ஏலம் விட்டு ஏலதாரர்களுக்கு பணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஃபுல் மப்பில் மட்டையான அலெக்ஸை மட்டை செய்த வெங்கடேசன்! சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரவுடி!

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஏல சீட்டு நடத்திய கோபி ஒரு சில பேருக்கு மட்டும் பணம் சரியான முறையில் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அடுத்தடுத்து மாதந்தோறும் பணம் செலுத்தி ஏலம் எடுத்தவர்களுக்கு பணத்தை வழங்காமல் கோபி இழுத்தடித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. ஏலம் எடுத்தவர்கள் பலமுறை பணம் கேட்டும் கடந்த ஒரு வருடமாக கோபி பணம் கொடுக்காமல் ஏமாத்தியே வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கோரிமேடு காவல் நிலையத்தில் ஒன்று திரண்டு கோபியின் மீது புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதையும் படிங்க:  கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிவிட்டு! இரண்டு ஆண்டுகளாக பூ, பொட்டுடன் வலம் வந்த மனைவி!

விசாரணையில் கோபி, அவரது மனைவி முத்தாலம்மன் மற்றும் உறவினர்கள் ஆகியோர் ஏல சீட்டு நடத்தி சுமார் 100 பேரிடம் ஒரு கோடியே 31 லட்சம் அளவில் மோசடி செய்தது உறுதியானது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதம் 5 ஆயிரம் ரூபாய் என 100 பேரிடம் ஏல சீட்டு நடத்தி ஒரு குடும்பமே ஒரு கோடியே 31 லட்சம் மோசடி செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios