IPL 2023 Final CSK VS GT: ஐபிஎல் 2023 ஃபைனல்: நீயானா, நானா போட்டியில் சென்னை vs குஜராத்!
சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று இரவு நடக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி உடன் முடிவடைகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியி சென்னை சூப்பர் கீங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத்தின் கோட்டை என்று சொல்லப்படும் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் ஃபைனல் நடக்கிறது.
IPL 2023 Final CSK VS GT: மீண்டும் அதே மைதானம்: 2ஆவது முறையாக சாம்பியனாகுமா குஜராத்?
இதுவரையில் நடந்த 14 லீக் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோற்று 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடியது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்து இறுதிப் போட்டி முன்னேறியது.
2011ல் இதே நாளில் பெங்களூருவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!
இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் 14 லீக் போட்டிகளில் 8ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக 10ஆவது முறையாக சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
பயிற்சி செய்ய மைதானத்திற்குள் ஸ்கூட்டரில் வந்த ரஷீத் கான் – வைரலாகும் வீடியோ!
ஒரு கேப்டனாக தோனி 10ஆவது ஐபிஎல் ஃபைனலில் விளையாடுகிறார். மேலும், இது இவரோட 11ஆவது ஐபிஎல் ஃபைனல். இது ஹர்திக் பாண்டியாவின் 6ஆவது ஐபிஎல் ஃபைனல். இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 250 ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தோனி படைப்பார்.
கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் 2ஆவது முறையாக இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக இரு அணிகளும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்னதாக நடந்த 4 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ஐபிஎல் இறுதிப் போட்டி: 28, மே 2023.
நேரம்: இரவு 7.30 மணி
இடம்: நரேந்திரமோடி ஸ்டேடியம், அகமதாபாத்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருத்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ஷிவம் துபே, அஜிங்கியா ரஹானே, அம்பத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, மகீஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சாண்ட்னர், சுப்ரன்ஷூ சேனாபதி, ஷேக் ரஷீத், ஆகாஷ் சிங், பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், சிஷாண்டா மகாளாஅ, அஜய் ஜதாவ் மண்டல், பிரசாந்த் சோலாங்கி, சிமர்ஜீத் சிங், ஆர்.எஸ்.ஹங்க்ரேக்கர், பகத் வர்மா, நிஷாந்த் சிந்து.
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சஹா (விக்கெட் கிப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், ஸ்ரீகர் பரத், ஷிவம் மவி, ஓடியன் ஸ்மித், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பிரதீப் சங்க்வான், மேத்யூ வாடே, ஜெயந்த் யாதவ், தசுன் சனாகா, அபினவ் மனோகர், அல்ஜாரி ஜோசஃப், தர்ஷன் நல்கண்டே, உர்வில் படேல், யாஷ் தயால்