ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நின்ன சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – First அண்ட் Final ஐபிஎல்!
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையில் தான் இந்த சீசனுக்கான முதல் போட்டி நடந்தது. இதையடுத்து கடைசி போட்டியும் நடக்க இருக்கிறது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசன் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனுக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடந்தது.
ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் என்று ஒவ்வொரு டீமா காலி செய்த சுப்மன் கில்: நெக்ஸ்ட் சிஎஸ்கேயா?
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில் ருத்துராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணில் சுப்மன் கில் 63 எடுத்துக் கொடுத்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கர்மா: தலைகீழாக மாறிய மும்பை இந்தியன்ஸ் போட்டி – எலிமினேட்டர் vs குவாலிஃபையர் 2!
இதையடுத்து இரு அணிகளும் முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதின. இதில், சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதன் பிறகு நேற்று நடந்த 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 233 ரன்கள் குவித்தது. இதில் சுப்மன் கில் அதிகபட்சமாக 129 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 171 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.
அடி மேல் அடி வாங்கி பரிதாபமாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!
இதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 28 ஆம் தேதி நாளை இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்கிறது. முதல் குவாலிஃபையர் போட்டியில் அடைந்த தோல்விக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் முதல் போட்டியில் மோதியைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியிலும் மோதுகின்றன.