கர்மா: தலைகீழாக மாறிய மும்பை இந்தியன்ஸ் போட்டி – எலிமினேட்டர் vs குவாலிஃபையர் 2!
எலிமினேட்டரில் சிறப்பாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குவாலிஃபையர் 2ல் நடந்த போட்டி மொத்தமாக ஆப்பு வைத்துவிட்டது.
ஐபிஎல் திருவிழா இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டது. நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்கிறது.
அடி மேல் அடி வாங்கி பரிதாபமாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
சேப்பாக்கதை விட இரவில் ஜொலிக்கும் நரேந்திர மோடி மைதானம் – வைரலாகும் வீடியோ!
அதுமட்டுமின்றி லக்னோ அணி வீரர்கள் தீபக் கூடா, கிருஷ்ணப்பா கவுதம், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய மூவரும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். இதே போன்ற சம்பவம் தான் நேற்றைய போட்டியில் நடந்துள்ளது. அதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் ஆடியது.
இதில், பீல்டிங்கின் போது ரோகித் சர்மா கேட்ச் பிடிக்கும் போது கையில் அடிபட்ட நிலையில் வெளியேறினார். இதே போன்று கிறிஸ் ஜோர்டானின் தோள்பட்டை, இஷான் கிஷானின் இடது கண் பகுதியில் பலமாக அடிக்கவே காயம் ஏற்பட்டு அவரும் வெளியேறினார்.
WTC இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு: முதல் பரிசு ரூ.13.2 கோடி, 2ஆம் பரிசு ரூ.6.5 கோடி!
இதையடுத்து இந்தப் போட்டியில் ஆகாஷ் மத்வால், 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 52 ரன்கள் விட்டுக் கொடுத்தார். கடந்த போட்டியில் 5 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எலிமினேட்டரில் லக்னோ வீரர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதே போன்று இந்தப் போட்டியில் மும்பை வீரர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து குவாலிஃபையர் 2ஆவது சுற்றிலேயே வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.