Asianet News TamilAsianet News Tamil

WTC இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு: முதல் பரிசு ரூ.13.2 கோடி, 2ஆம் பரிசு ரூ.6.5 கோடி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ICC Announced Prize Money for World Test Championship 2021-23 cycle
Author
First Published May 26, 2023, 1:32 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎல் ராகுல், கேஎஸ்ல் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனத்கட்.

MIயை பார்த்தால் பயமா இருக்கு; மும்பை மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது: டுவைன் பிராவோ!

கேஎல் ராகுல், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். ஏற்கனவே கேஎல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் அறிவிக்கப்பட்டார்.

கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் 2ஆவது குவாலிஃபையர்: மும்பை, குஜராத் பலப்பரீட்சை!

ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றிருந்த இந்திய அணி வீரர்கள் முதல் பேட்ஜாக இங்கிலாந்து சென்றுள்ளனர். அதில் விராட் கோலி, அக்‌ஷர் படேல், உமேஷ் யாதவ், ராகுல் டிராவிட், முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்திய அணியின் கிட் ஸ்பான்ஸராக அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

பத்திரனாவை என்ன மாதிரி ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணா, அவர் இந்திய அணியில் விளையாடுவாரா?

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. வெற்றி பெறும் அணிக்கு ரூ.13.2 கோடியும், 2ஆவது இடம் பெறும் அணிக்கு ரூ. 6.5 கோடியும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரனா பற்றி தோனி என்ன சொன்னார்? பெருமிதமாக பகிர்ந்த பத்திரனா சகோதரி!

ஐசிசி டெஸ்ட் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 9 இடங்களில் உள்ள அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021- 2023 ஆம் ஆண்டுக்கான பரிசுத் தொகை 3.8 மில்லியன் டாலர் பிரித்து வழங்கப்படுகிறது. அதன்படி வெற்றி பெறும் அணிக்கு ரூ.13.2 கோடியும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்படுகிறது.

உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்‌ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!

இவை தவிர,

தென் ஆப்பிரிக்கா – ரூ. 3.5 கோடி

இங்கிலாந்து – ரூ. 2.8 கோடி

இலங்கை – ரூ. 1. 6 கோடி

நியூசிலாந்து – ரூ. 82 லட்சம்

பாகிஸ்தான் – ரூ. 82 லட்சம்

வெஸ்ட் இண்டீஸ் – ரூ. 82 லட்சம்

வங்கதேசம் – ரூ. 82 லட்சம்

கடந்த 2019 – 21 ஆம் ஆண்டுகளில் என்ன பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதோ, அதே பரிசுத் தொகை தான் இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பரிசுத் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கு முன்னதாக இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்ற நியூசிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 #WTCFinal2023 #INDvsAUS #IndiavsAustraliaTest #TeamIndia #Test #OvalTest #ICCAnnnouncedPrizeMoney #PrizeMoney #Australia #England #WTCFinalPrizeMoney #RohitSharma #ViratKohli

Follow Us:
Download App:
  • android
  • ios