MIயை பார்த்தால் பயமா இருக்கு; மும்பை மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது: டுவைன் பிராவோ!
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்றும், ஆதலால், அந்த அணி மட்டும் இறுதிப் போட்டிக்கு வந்திரக் கூடாது என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் டுவைன் பிராவோ கூறியுள்ளார்.
ஐபிஎல் திருவிழா இறுதிப் போட்டியை நெருங்கிவிட்டது. இன்னும் ஒரு நாள் தான் 16ஆவது சீசனுக்கான சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் அணி யார் என்று தெரிந்துவிடும். கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றைக் கூட காணாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் 2ஆவது குவாலிஃபையர்: மும்பை, குஜராத் பலப்பரீட்சை!
கடந்த 23 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் குவாலிஃபையர் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி வரை போராடியது.
பத்திரனாவை என்ன மாதிரி ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணா, அவர் இந்திய அணியில் விளையாடுவாரா?
எனினும், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே 10ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும், பவுலிங் பயிற்சியாளருமான டுவைன் பிராவோ, மும்பை இந்தியன்ஸ் அணியைப் பார்த்தால் பயமாக இருக்கும். அந்த அணி மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது. அந்த அணியை நாக் அவுட் போட்டிகளில் வெல்வது எளிதல்ல.
பத்திரனா பற்றி தோனி என்ன சொன்னார்? பெருமிதமாக பகிர்ந்த பத்திரனா சகோதரி!
ஆதலால் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது. இறுதிப் போட்டிக்கான ரேஸில் இருக்கும் அணிகளுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் 3 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இதில் ஒரு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!