கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் 2ஆவது குவாலிஃபையர்: மும்பை, குஜராத் பலப்பரீட்சை!
மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான 2ஆவது குவாலிஃபையர் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக குஜராத்தி பாடகியான கிஞ்சல் டேவின் கலை நிகழ்ச்சி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிப் போட்டியை நெருங்கிவிட்டது. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதையடுத்து மும்பை குவாலிஃபையர் 2ஆவது போட்டிக்கு முன்னேறியது.
பத்திரனாவை என்ன மாதிரி ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணா, அவர் இந்திய அணியில் விளையாடுவாரா?
இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாலிஃபையர் 2வது போட்டி நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக கலைநிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் குஜராத்தி பாடகியான கிஞ்சல் டேவ் பாடல் பாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரனா பற்றி தோனி என்ன சொன்னார்? பெருமிதமாக பகிர்ந்த பத்திரனா சகோதரி!
பொதுவாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்படும். அதே போன்று கடைசி போட்டியிலும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்த 16ஆவது சீசனில் தொடக்க நிகழ்ச்சியில் தமன்னா, ராஷ்மிகா மந்தனா, அர்ஜித் சிங் ஆகியோரது கலை நிகழ்ச்சி நடந்தது. ஆனால் இந்த சீசனில் குவாலிஃபையர் 2வது போட்டியிலேயே கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!
அரையிறுதி போட்டியாக கருதப்படும் குவாலிஃபையர் 2வது போட்டிக்கே கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இறுதிப்போட்டிக்கு பிசிசிஐ திட்டம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே பேச தொடங்கியுள்ளனர். இதனால் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்புக்கு நிகராக கலைநிகழ்ச்சிகளுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்த ஆகாஷ் மத்வால்!