பத்திரனா பற்றி தோனி என்ன சொன்னார்? பெருமிதமாக பகிர்ந்த பத்திரனா சகோதரி!

பத்திரனா என்னுடன் இருப்பதால், அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை என்று பத்திரனாவின் சகோதரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

What did MS Dhoni say about Matheesha Pathirana? Proudly shared Matheesha Pathirana sister!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிப் போட்டியை நெருங்கிவிட்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 3 அணிகளில் ஏதோ ஒரு அணி தான் 16ஆவது சீசனுக்கான சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் செல்ல இருக்கிறது. கடந்த சீசனில் பிளே ஆஃப் வராத 2 அணிகளும் இந்த சீசனில் பிளே ஆஃப் வரை சென்று இறுதிப் போட்டி வரை வந்துள்ளன.

24 ஆண்டுகளுக்குப் பிறகு அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்த ஆகாஷ் மத்வால்!

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக இருப்பவர் மதீஷா பத்திரனா. மலிங்கா போன்று பந்து வீசும் இளம் வீரராக பத்திரனா திகழ்கிறார். இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள பத்திரனா, 42.2 ஓவர்கள் வீசி 327 ரன்கள் விட்டுக் கொடுத்து, 17 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில், அதிகபட்சமாக 3/15 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ரன் அவுட், 5 விக்கெட்; பவுலிங், பீல்டிங்கில் கெத்து காட்டி வரலாற்று வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்!

இந்த சீசனில் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட பத்திரனாவிற்கு தோனியின் ஆதரவு இருக்கும் வரையில் அவர் சென்னை அணியில் முக்கிய பங்கு வகிக்கும் வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் பத்திரனா 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றி 28 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

ஜடேஜாவை சமாதானப்படுத்திய சிஎஸ்கே சிஇஓ: வைரலாகும் வீடியோ!

ஒரு கட்டத்தில் 12ஆவது ஓவரை வீசிவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் 16ஆவது ஓவர் வீச வந்த அவருக்கு நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தோனி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். அதன் பிறகு 5 நிமிடங்களுக்குப் பிறகு பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. வரும் 28 ஆம் தேதி நாளை மறுநாள் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. சென்னைக்கு எதிராக களமிறங்கும் அணிக்கான 2ஆவது குவாலிஃபையர் போட்டி இன்று நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்‌ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!

இந்த நிலையில், நேற்று பத்திரனாவின் குடும்பத்தினர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரனாவின் சகோதரி, விஷூகா பத்திரனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மதீஷாவைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. அவன் எப்போதும் என்னுடன் இருக்கிறான் என்று தோனி கூறியதாக விஷூகா குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios