Asianet News TamilAsianet News Tamil

3 ரன் அவுட், 5 விக்கெட்; பவுலிங், பீல்டிங்கில் கெத்து காட்டி வரலாற்று வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

MI beat LSG by 81 Runs Difference in IPL Eliminator at Chepauk Stadium Chennai
Author
First Published May 24, 2023, 11:38 PM IST

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

ஜடேஜாவை சமாதானப்படுத்திய சிஎஸ்கே சிஇஓ: வைரலாகும் வீடியோ!

இதில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அப்படி ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் பிளே ஆஃப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 182 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த அணியில் முதலிடம் பிடித்துள்ளது.

பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டுமே நிதானமாக ஆடி 40 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், 3 வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆகாஷ் மத்வால் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?

இதுவரையில் இந்த சீசனில் 3.3 ஓவர்களில் 5 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக தொடர்ந்து 2 ஆவது முறையாக எலிமினேட்டர் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.

உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்‌ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!

இதுவரையில் இரு அணிகளுக்கும் இடையில் நடந்த 3 போட்டிகளிலும் லக்னோவே வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது 4ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அண் இவரும் 26ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் குவாலிஃபையர் 2 சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios