ஜடேஜாவை சமாதானப்படுத்திய சிஎஸ்கே சிஇஓ: வைரலாகும் வீடியோ!

கர்மா டுவீட் எதிரொலி காரணமாக தோனி மற்றும் ஜடேஜா இடையில் பூகம்பம் வெடிக்காமல் இருப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ ஜடேஜாவை சமாதானப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

CSK CEO Kasi Viswanathan Spoke with Ravindra Jadeja after won against GT at Chepauk Stadium in Chennai

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வந்தார். ஆனால், ஜடேஜாவின் கேப்டன்ஷியின் கீழ் செயல்பட்ட சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதையடுத்து தோனி கேப்டனாக செயல்பட்டார். அந்த சீசனில் சென்னை 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.

அப்ஸ்டாக்கிற்கு தெரியுது, உங்களுக்கு தெரியவில்லை: ரவீந்திர ஜடேஜா வேதனை டுவீட் – எங்க அணிக்கு வாங்க!

ஆனால், இந்த சீசனில் ஜடேஜாவிற்கு மறைமுகமாக எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் பேட்டிங் ஆட வரும் போது விரைவாகவே அவுட்டாக வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுவதாகவும், கோஷமிடுவதாகவும் அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அவருக்குப் பின் வரும் தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் அவ்வாறு கூறுவதாக கூறியுள்ளார்.

அடுத்த வருசம் ஹல்லா போல், கொஞ்சம் பலமா போல் - சிஎஸ்கேவுக்கு ஆதரவு கொடுத்த அஸ்வின்!

இதற்கிடையில் ஜடேஜா டுவிட்டரில் கர்மா தொடர்பான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதாவது, நீங்கள் கொடுத்ததை கர்மா உங்களுக்கு திரும்ப அளிக்கும். அது உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ கூட கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாக திரும்ப தரும் என்று குறிப்பிட்டுள்ளார். தோனியுடனான மோதலை குறிப்பிட்டுத் தான் ஜடேஜா இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?

அதுமட்டுமின்றி நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் குவாலிஃபையர் போட்டி நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஜடேஜா, அப்ஸ்டாக் என்ற நிறுவனம் மதிப்பு வாய்ந்த வீரர் என்ற விருது வழங்கி கௌரவித்தது.

உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்‌ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!

இது குறித்தும் ஜடேஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதாவது, அப்ஸ்டாக்கிற்கு தெரிகிறது. ஆனால், சில ரசிகர்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில், நேற்றைய போட்டி முடிந்த பிறகு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், ஜடேஜாவிடம் 13 வினாடிகள் வரையில் பேசியுள்ளார். அதில், அவர் ஜடேஜாவை சமாதானப்படுத்தியாக கூறப்படுகிறது.

ஒருத்தர் கூட 50 இல்லை: ஐபிஎல் பிளே ஆஃபில் 182 ரன்கள் குவித்து சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios