Asianet News TamilAsianet News Tamil

அப்ஸ்டாக்கிற்கு தெரியுது, உங்களுக்கு தெரியவில்லை: ரவீந்திர ஜடேஜா வேதனை டுவீட் – எங்க அணிக்கு வாங்க!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு மதிப்பு வாய்ந்த வீரர் என்ற விருதை அப்ஸ்டாக்ஸ் விருது வழங்கி கௌரவித்தது.

Ravindra Jadeja received an upstox most valuable asset of the match
Author
First Published May 24, 2023, 5:55 PM IST

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்தது. இந்த சீசன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்று கருதிய ரசிகர்கள் எப்போதெல்லாம் சிஎஸ்கே அணி பேட்டிங் ஆடுகிறதோ, அப்பொதெல்லாம் ஜடேஜா பேட்டிங் ஆடிக் கொண்டிருக்கும் போதே ரசிகர்கள் தோனியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். மேலும், ரவீந்திர ஜடேஜா அவுட்டாக வேண்டும் என்றும், தோனி தோனி என்றும் கோஷம் எழுப்பியும் வருவதாக ஜடேஜாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

அடுத்த வருசம் ஹல்லா போல், கொஞ்சம் பலமா போல் - சிஎஸ்கேவுக்கு ஆதரவு கொடுத்த அஸ்வின்!

இதன் காரணமாக கடந்த சின தினங்களுக்கு முன்பு ஜடேஜா தனது டுவிட்டரில் நீங்கள் கொடுத்ததை கர்மா உங்களுக்கு திரும்ப அளிக்கும். அது உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ கூட கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாக திரும்ப தரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த சீசனில் விளையாடலாமா? வேண்டாமா? டிசம்பரில் தான் முடிவு எடுப்பேன் – தோனி!

இந்த நிலையில் தான் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிஃபையர் போட்டியில் ஜடேஜா 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்ததோடு, பந்து வீச்சில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்ததோடு தசுன் ஷனாகா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரது விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மேலும், ஹர்திக் பாண்டியாவின் கேட்சையும் பிடித்துள்ளார்.

யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?

அதோடு, ஐபிஎல் வரலாற்றில் 1000 ரன்களுக்கு மேல் குவித்து 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக டுவைன் பிராவோ மற்றும் சுனில் நரைன் ஆகியோர் இந்த சாதனை பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். மேலும், ஐபிஎல் தொடரில் 2000க்கும் அதிகமான ரன்கள் சேர்த்து 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜட்டுவின் பீல்டிங்கை மாற்றி ஹர்திக் பாண்டியாவை தூக்கிய தோனி: வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு ஜடேஜாவிற்கு அப்ஸ்டாக் என்ற நிறுவனம் மதிப்பு வாய்ந்த வீரர் என்ற விருது வழங்கி கௌரவித்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த ஜடேஜா, அப்ஸ்டாக்கிற்கு தெரிகிறது. ஆனால், சில ரசிகர்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலமாக ரசிகர்களால் ஜடேஜா எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது.

சில ரசிகர்கள் உங்களது திறமையும், அருமையும் எங்களுக்கு புரிகிறது. நீங்கள் எங்கள் அணிக்கு வாருங்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்‌ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios