யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?
மாதந்தோறும் ரூ. 1 கோடி வீதம் வருடத்திற்கு ரூ.12 கோடி வரையில் யுவராஜ் சிங் வருமானம் ஈட்டி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகள் என்று மூன்று சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில், யுவராஜ் சிங் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஜட்டுவின் பீல்டிங்கை மாற்றி ஹர்திக் பாண்டியாவை தூக்கிய தோனி: வைரலாகும் வீடியோ!
அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு ரூ.320 கோடி என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டிற்கு அவர் செய்த சேவைகள் காரணமாக அவரது பிராண்ட் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 39 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது. மாதந்தோறும் ரூ.1 கோடி வீதம் வருடத்திற்கு ரூ.12 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்தியா பார்வையற்றோருக்கான உலகக் கோப்பையை நடத்தியது. இதில், யுவராஜ் சிங் நல்லெண்ண தூதராக பணியாற்றினார்.
பத்திரனாவுக்காக ரிஸ்க் எடுத்து 5 நிமிடம் மைதானத்தில் நடுவருடன் வாக்குவாதம் செய்த தோனி!
சண்டிகாரில் ரூ.5.2 கோடிக்கு சொந்தமாக வீடு ஒன்று வைத்துள்ளார். தற்போது அவர் மும்பையில் உள்ள வோர்லி பிளாட்டில் தனது மனைவி மற்றும் அம்மாவுடன் வசித்து வருகிறார். இந்த பிளாட்டின் மதிப்பு ரூ.60 கோடி என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ரூ.40 கோடிக்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். பென்ட்லி கான்டினென்டல், BMW 3 சீரிஸ், ஆடி Q5 மற்றும் பலவற்றை வைத்திருக்கிறார். இந்த ஆட்டோ மொபைல்களின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் ஆகும்.
விஜய் சங்கரை மான்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சித்த தீபக் சாஹர் – கூலாக சிரித்த எம்.எஸ்.!