விஜய் சங்கரை மான்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சித்த தீபக் சாஹர் – கூலாக சிரித்த எம்.எஸ்.!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் விஜய் சங்கரை மான்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சி செய்த தீபக் சஹாரைப் பார்த்து தோனி சிரித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 12 ரன்களில் வெளியேறினார்.
கோட்டையில் வரலாற்றை மாற்றியமைத்து 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற சிஎஸ்கே!
பொறுப்பாக ஆட வேண்டிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் வெளியேறினார். தசுன் ஷனாகா 17 ரன்களிலும், டேவிட் மில்லர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 13 ஓவர்கள் வரையில் 4 விக்கெட் இழந்து வெறும் 88 ரன்கள் மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்திருந்தது. பின்னர் 14ஆவது ஓவரை வீச தீபக் சாஹர் வந்தார். அவரது முதல் பந்திலேயே சுப்மன் கில் ஆட்டழிழந்து வெளியேறினார். கில் 38 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
தோனி எனது நண்பர், சகோதரர்; நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - ஹர்திக் பாண்டியா!
இதையடுத்து ராகுல் திவேதியா களமிறங்கினார். நான் ஸ்டிரைக்கர் திசையில் விஜய் சங்கர் நின்று கொண்டிருந்தார். அப்போது பந்து வீச வந்த தீபக் சாஹர் யாரும் எதிர்பாராத நேரத்தில் விஜய் சங்கரை மான்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சித்து பந்தை ஸ்டெம்பில் தட்டினார். ஆனால், விஜய் சங்கர் கிரீஸை விட்டு வெளியில் வரவில்லை. அதன் பிறகு இருவரும் பார்த்து சிரித்துக் கொண்டனர். மறுமுனையில் இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த எம்.எஸ்.தோனி கூலாக சிரித்துள்ளார்.
காஃபி மீதான தோனியின் காதல் பற்றி தெரியுமா? சுரேஷின் காஃபி மீது தோனி கொண்ட காதல்!
ஆனால், இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலாக இந்தூரில் கடந்த ஆண்டு நடந்த டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸை மான்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சித்து அவருக்கு பயம் காட்டியுள்ளார். இதே போன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியிலும் தீபம் சாஹர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோரது விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும், 4 ஓவர்கள் வீசிய அவர் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக 12 ஆவது பிளே ஆஃப் போட்டியில் விளையாடிய சிஎஸ்கே 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இந்தப் போட்டி வரும் 28ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக விக்கெட்டு, அதிக ரன் பட்டியலிலும் டாப்பில் இருக்கும் குஜராத், அப்போ சிஎஸ்கே?