தோனி எனது நண்பர், சகோதரர்; நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - ஹர்திக் பாண்டியா!
தோனி எனது நண்பர், சகோதர் என்றும், நான் அவரிடம் நிறைய ஜோக்குகள் சொல்வேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது ஐபிஎல் சீசனின் முதல் பிளே ஆஃப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் 3 போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி கண்டுள்ளது.
காஃபி மீதான தோனியின் காதல் பற்றி தெரியுமா? சுரேஷின் காஃபி மீது தோனி கொண்ட காதல்!
அதுமட்டுமின்றி, அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களும் குஜராத் அணியில் தான் இடம் பெற்றுள்ளனர். முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று களமிறங்குகிறது. தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நீண்ட கால நண்பர்கள். தோனியின் ஆஸ்தான பவுலர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர்.
அதிக விக்கெட்டு, அதிக ரன் பட்டியலிலும் டாப்பில் இருக்கும் குஜராத், அப்போ சிஎஸ்கே?
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவின் வீடியோ ஒன்றை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், தோனி குறித்து ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நான் எப்போதும் மகேந்திர சிங் தோனி ரசிகனாக இருப்பேன். தோனியின் ஆட்டத்தை பார்த்து தான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். யாரெல்லாம் தோனியை வெறுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் கண்டிப்பாக பிசாசாகத்தான் இருப்பார்கள்.
சிஎஸ்கே பற்றி நன்கு தெரிந்த சாய் கிஷோரை களமிறக்கும் குஜராத் டைட்டன்ஸ்!
நிறைய பேர் அவர் சீரியஸானவர் என்று நினைக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, நான் நகைச்சுவையாக பேசுவேன், நான் அவரை மகேந்திர சிங் தோனியாக பார்க்கவில்லை. நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், நிறைய நேர்மறையான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
ஆரஞ்சு கேப் வச்சிருந்தும் பிளே ஆஃப் வராமல் போன ஃபாப் டூப்ளெசிஸ்!
எப்போதெல்லாம் சிஎஸ்கே விளையாடுகிறதோ அப்போதெல்லாம் மைதானத்தில் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் தோனி, தோனி என்று கோஷமிடும் போது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, அவர் என் அன்பான நண்பர், அன்பான சகோதரர், நான் குறும்புகள் செய்பவன் என்று கூறியுள்ளார்.
சேப்பாக்கம், பிளே ஆஃப்பில் தோனி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?