Asianet News TamilAsianet News Tamil

காஃபி மீதான தோனியின் காதல் பற்றி தெரியுமா? சுரேஷின் காஃபி மீது தோனி கொண்ட காதல்!

உலகமே கொண்டாடும் தோனிக்கு காஃபி என்றால் ரொம்பவே பிடிக்குமாம். அதுவும், சென்னை கிரவுன் பிளாசா தென்னிந்திய ஹோட்டலில் உள்ள சுரேஷ் கொடுக்கும் காஃபி என்றால் தோனிக்கு உயிராம்.

Do you know about CSK Skipper MS Dhoni's love for coffee?
Author
First Published May 23, 2023, 4:15 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டி இன்று இரவு7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.  கடந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பு கூட எட்டாத சிஎஸ்கே அணியை இளம் படையை கொண்டு தோனி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்று வரை அழைத்து வந்துள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ள தோனிக்காகத் தான் சென்னை போட்டியை காண ரசிகர்கள் வருகிறார்கள். தோனி ஒருவர் தான். அவருக்காகத் தான் வருகிறோம் என்று எத்தனையோ ரசிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படி தோனி மீது ரசிகர்கள் காதல் கொண்டிருக்கிறார்கள்.

அதிக விக்கெட்டு, அதிக ரன் பட்டியலிலும் டாப்பில் இருக்கும் குஜராத், அப்போ சிஎஸ்கே?

அப்படியிருக்கும் போது தோனிக்கு காஃபி மீது தான் அதிக காதல். அதுவும், சென்னை அடையார் பார்க்கில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் வேலை பார்க்கும் சுரேஷ் கொடுக்கும் காஃபி என்றால் தோனிக்கு உயிராம். எப்போதெல்லாம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டி நடக்கிறதோ அப்போதெல்லாம் தோனி மட்டுமின்றி தோனி தலைமையிலான சிஎஸ்கே வீரர்கள் கிரவுன் பிளாசா ஹோட்டலில் தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சிஎஸ்கே பற்றி நன்கு தெரிந்த சாய் கிஷோரை களமிறக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

கடந்த 2008 ஆம் ஆண்டு தோனி சென்னைக்கு வந்த போது அவருக்கு தென்னிந்திய ஃபில்டர் காஃபியை தயார் செய்து சுரேஷ் கொடுத்துள்ளார். அது தோனிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தோனி முதல் முறையாக இப்படியொரு சுவை கொண்ட பில்டர் காஃபி அங்கு தான் குடித்துள்ளார். அன்று முதல் இன்று வரை தோனி அங்கு பில்டர் காஃபி குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

ஆரஞ்சு கேப் வச்சிருந்தும் பிளே ஆஃப் வராமல் போன ஃபாப் டூப்ளெசிஸ்!

தோனிக்கு மட்டுமின்றி ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகியோர் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த போது அவர்களுக்கும் பிடித்துப் போய்விட்டது. சுரேஷின் திறமையை பாராட்டிய தோனி, அவர் காஃபி போடுவதையும் பார்த்து மகிழந்துள்ளார். சுரேஷ் மற்றும் தோனி இருவருக்கும் இடையிலான உறவு ஒரு வாடிக்கையாளர் மற்றும் சர்வர் என்பதையும் தாண்டி வளர்ந்து வந்துள்ளது.

சேப்பாக்கம், பிளே ஆஃப்பில் தோனி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

ஆனால், கிரவுன் பிளாசா ஹோட்டலில் தங்காத போதெல்லாம், சுரேஷின் காஃபியை மிஸ் செய்கிறார்கள். அதே போன்று தான் சுரேஷும், அவர்களை மிஸ் செய்கிறார். இந்த தருணத்தில் தோனி மற்றும் சுரேஷ் இருவருக்கும் இடையில் உள்ள நட்பை காண முடியாவிட்டாலும், அவர் பகிர்ந்த காஃப் மீதான தோனியின் காதல் பலரையும் வியக்க வைக்கிறது.

மழை காரணமாக பிளே ஆஃப் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்னாகும்?

Follow Us:
Download App:
  • android
  • ios