மழை காரணமாக பிளே ஆஃப் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்னாகும்?
சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில், மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் புள்ளிப்பட்டியலின்படி குஜராத் டைட்டன்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான முதல் பிளே ஆஃப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. 12 முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளது. இதே போன்று தொடர்ந்து 2ஆவது முறையாக குஜராத் அணி சென்றுள்ளது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் முறையாக குஜராத அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.
12ஆவது முறையாக பிளே ஆஃபில் சென்னை, தொடர்ந்து 2 ஆவது முறையாக குஜராத்!
இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் மூன்றிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. இன்று நடக்கும் போட்டியின் போது மழை குறுக்கிட்டால்,கடைசியாக சூப்பர் ஓவர் நடத்தப்படும். இதன் மூலமாக வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஆனால், சூப்பர் ஓவர் நடத்தப்பட வாய்ப்பில்லை என்றால் புள்ளிப்பட்டியல் தான் இறுதி முடிவை தீர்மானிக்கும். இது தான் அனைத்து பிளே ஆஃப் சுற்றுகளுக்கும் பயன்படுத்தப்படும். ஒருவேளை இன்றைய போட்டி நடக்கவில்லை என்றால் புள்ளிப்பட்டியலின் படி குஜராத் டைட்டன்ஸ் அணிதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
சேப்பாக்கம், பிளே ஆஃப்பில் தோனி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?
ஆனால், இன்றைய போட்டியின் போது மழை பெய்ய 1 சதவிகிதம் கூட வாய்ப்பில்லை. சென்னையில் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், இன்றைய போட்டியில் 40 ஓவர்கள் முற்றிலுமாக வீசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைமுகமாக மோதிக் கொண்ட தோனி – ஜடேஜா: பிளே ஆஃபில் பாதிப்பை ஏற்படுத்துமா?