Asianet News TamilAsianet News Tamil

மறைமுகமாக மோதிக் கொண்ட தோனி – ஜடேஜா: பிளே ஆஃபில் பாதிப்பை ஏற்படுத்துமா?

எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு இடையில் மறைமுகமாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று நடக்கும் முதல் பிளே ஆஃப் சுற்றில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Dhoni and Jadejas apparent clash: Will it affect the playoffs?
Author
First Published May 23, 2023, 9:38 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் 3 போட்டிகளுடன் நிறைவு பெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் சுற்று நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

நாளை காலை 4.30 மணிக்கு இங்கிலாந்து செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி!

சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய சிஎஸ்கே 223 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் 146 ரன்கள் மட்டுமே எடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஒரு போட்டியில் மட்டும் ஜெயிச்சிட்டால் திரும்ப வந்திருவோம் – உண்மையான ரோகித் சர்மாவின் வாக்கு!

இதில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா வீசிய 4 ஓவர்களில் ஒரு விக்கெட் உள்பட 50 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து போட்டி முடிந்த பிறகு ஜடேஜாவிடம் சென்று தோனி பவுலிங் குறித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் வார்த்தை மோதலில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து உடனடியாக ஜடேஜா அங்கிருந்து டிரெஸீங் ரூமிற்கு சென்றுவிட்டார். ஆனால், இந்த மோதல் நீண்ட நாட்களாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது.

IPL 2023: மிடில் ஆர்டர் சரியில்லை; ஒரு போட்டியில் ஜெயித்தால் மீண்டு வருவோம்: ரோகித் சர்மா!

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வந்தார். ஆனால், ஜடேஜாவின் கேப்டன்ஷியின் கீழ் செயல்பட்ட சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதையடுத்து தோனி கேப்டனாக செயல்பட்டார். அந்த சீசனில் சென்னை 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.

ஆர்சிபி தோல்விக்கு யார் காரணம்? ஃபாப் டூப்ளெசிஸ் ஓபன் டாக்!

ஆனால், இந்த சீசனில் ஜடேஜாவிற்கு மறைமுகமாக எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் பேட்டிங் ஆட வரும் போது விரைவாகவே அவுட்டாக வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுவதாகவும், கோஷமிடுவதாகவும் அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அவருக்குப் பின் வரும் தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் அவ்வாறு கூறுவதாக கூறியுள்ளார்.

ஆர்சிபி ஐபிஎல் வெல்லும் வரையில் பள்ளியில் சேர மாட்டேன் – அடம் பிடிக்கும் சுட்டிக் குழந்தை!

இப்படி பல காரணங்கள் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜடேஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீங்கள் கொடுத்ததை கர்மா உங்களுக்கு திரும்ப அளிக்கும். அது உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ கூட கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாக திரும்ப தரும் என்று குறிப்பிட்டுள்ளார். தோனியுடனான மோதலை குறிப்பிட்டுத் தான் ஜடேஜா இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது. இந்த மறைமுக மோதல் இன்று சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios