ஆர்சிபி தோல்விக்கு யார் காரணம்? ஃபாப் டூப்ளெசிஸ் ஓபன் டாக்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த ஆர்சிபி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.
நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் ஆடிய ஆர்சிபி 197 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனிக்கு சேப்பாக்கம் மாதிரியை பரிசளித்த ரசிகர்கள்: லைட்டில் ஜொலிக்கும் Chepauk Stadium Miniature!
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. தோல்விக்குப் பிறகு பேசிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் கூறியிருப்பதாவது: 2ஆவது இன்னிங்ஸில் ஆடுகளம் கொஞ்சம் ஈரப்பதமாக இருந்தது. ஆதலால் பந்தை பிடிக்க முடியாத நிலையில் அடிக்கடை பந்தை மாற்றவும் நேரிட்டது.
முழங்காலில் காயமடைந்த விராட் கோலி: இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் நாங்கள் வெற்றி பெறும் நிலைக்கு சென்றோம். ஆனால், சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது வெற்றி தட்டிச் சென்றுவிட்டார். எங்களது அணியில் டாப் 4 வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் ரன்கள் சேர்க்க தவறிவிட்டனர். ஒரு முறை என்றால் பரவாயில்லை. இந்த சீசன்களில் இது தான் நடந்துள்ளது.
விரக்தியடைந்த ஆர்சிபி ரசிகர்கள்: சுப்மன் கில்லிற்கு கொலை மிரட்டல், மரணத்திற்கு வாழ்த்து!
இதன் காரணமாக பல போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளோம். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடவில்லை. இது எங்களது வெற்றியை பாதித்தது. இந்த சீசனில் வெற்றி பெறும் அணியை எடுத்துக் கொண்டால் 5 அல்லது 6ஆவதாக வரும் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுத்தனர். விக்கெட் கைப்பற்ற முடியவில்லை. பேட்டிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. இந்த சீசன் ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்று வருத்தமாக கூறினார்.
ஆர்சிபி தோல்வி அடைந்த சந்தோஷம், மும்பையின் பிளே ஆஃப் கனவு நிறைவேறிய மகிழ்ச்சி: கொண்டாடிய MI பாய்ஸ்!