ஆர்சிபி தோல்வி அடைந்த சந்தோஷம், மும்பையின் பிளே ஆஃப் கனவு நிறைவேறிய மகிழ்ச்சி: கொண்டாடிய MI பாய்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்ததை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சந்தோஷமாக கொண்டாடியுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், 4ஆவது இடத்திற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றன.
ஆர்சிபியை வீட்டுக்கு அனுப்பி, மும்பைக்கு வழிகாட்டிய சுப்மன் கில்!
இதில், நேற்று ஐபிஎல் 16ஆவது சீசனின் 69 மற்றும் 70ஆவது லீக் போட்டிகள் நடந்தது. ஐபிஎல் தொடரின் 69ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் கேமரூன் க்ரீன் சதம் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
விராட் கோலிக்கு போட்டியாக சதம் அடித்த சுப்மன் கில்: ஆர்சிபியை விரட்டியடித்து குஜராத் வெற்றி!
கேமரூன் க்ரீன் 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆர்சிபி ஐபிஎல் வெல்லும் வரையில் பள்ளியில் சேர மாட்டேன் – அடம் பிடிக்கும் சுட்டிக் குழந்தை!
எனினும், ஆர்சிபி வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனிலிருந்து வெளியேறும் நிலை இருந்தது. ஆனால், பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் டாஸ் போடுவதும் தாமதமானது. ஒருவழியாக மழை நின்ற பிறகு போட்டி தொடங்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை: RCB vs GT போட்டி ரத்தானால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?
விராட் கோலி 61 பந்துகளில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் உள்பட 101 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் சதம் அடித்து வெற்றி தேடிக் கொடுத்தார். அவர் 52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசி லீக்: வெற்றி பெறுமா பெங்களூரு? முதல் முறையாக GT vs RCB பலப்பரீட்சை!
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்த கையோடு ஆர்சிபியை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்த நிலையில், தங்களது பிளே ஆஃப் கனவு நிறைவேறிய சந்தோஷத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜடேஜா முன்பு வாள் சுற்றிக்காட்டிய டேவிட் வார்னர்; வைரலாகும் வீடியோ!
இதையடுத்து வரும் 24 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் சுற்று நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி எலிமினேட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.