ஆர்சிபியை வீட்டுக்கு அனுப்பி, மும்பைக்கு வழிகாட்டிய சுப்மன் கில்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து கடைசி அணியாக வெளியேறியுள்ளது.

Tamil GT Player Shubman Gill Century helps to beat RCB and MI entered into Play Off

ஐபிஎல் 16ஆவது சீசனின் கடைசி லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இந்தப் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.

விராட் கோலிக்கு போட்டியாக சதம் அடித்த சுப்மன் கில்: ஆர்சிபியை விரட்டியடித்து குஜராத் வெற்றி!

அதன்படி முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதில், தொடக்க வீரர் விராட் கோலி 61 பந்துகளில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் உள்பட 101 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக சதம் அடித்துள்ளார். ஃபாப் டூப்ளெசிஸ் 28 ரன்களும், பிரேஸ்வெல் 26 ரன்களும், அனுஜ் ராவத் 23 ரன்களும் எடுத்தனர்.

ஆர்சிபி ஐபிஎல் வெல்லும் வரையில் பள்ளியில் சேர மாட்டேன் – அடம் பிடிக்கும் சுட்டிக் குழந்தை!

பின்னர், கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் அதிரடியாக ஆடி 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களில் ஆட்டமிழந்தார். தசுன் ஷனாகா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார். டேவிட் மில்லர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய சுப்மன் கில் சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். அவர் இந்த சீசனில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசியுள்ளார். 52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை: RCB vs GT போட்டி ரத்தானால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக குஜராத் அணி 20 புள்ளிகள் பெற்றுள்ளது. சுப்மன் கில் அடித்த சதம் ஆர்சிபியை வீட்டுக்கு அனுப்பியதோடு, மும்பையின் பிளே ஆஃப் கனவிற்கு வழிகாட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முக்கியமான போட்டியான இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக ஐபிஎல் தொடரிலிருந்து கடைசி அணியாக வெளியேறியது.

ஜடேஜா முன்பு வாள் சுற்றிக்காட்டிய டேவிட் வார்னர்; வைரலாகும் வீடியோ!

இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. அதோடு, மும்பை மற்றும் பெங்களூரு அணிகளின் முடிவுக்காக காத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி லீக்: வெற்றி பெறுமா பெங்களூரு? முதல் முறையாக GT vs RCB பலப்பரீட்சை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios