ஜடேஜா முன்பு வாள் சுற்றிக்காட்டிய டேவிட் வார்னர்; வைரலாகும் வீடியோ!

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் டேவிட் வார்னர், ஜடேஜாவைப் போன்று வாள் சுற்றுவது போன்று சுற்றி ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

Delhi Capitals Skipper David Warner imitates Ravindra Jadeja in 67th IPL Match at Delhi

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 67ஆவது ஐபிஎல் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் டேவிட் வார்னரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதில், டேவிட் வார்னர் மட்டும் கடைசி வரை போராடி கடைசியில் அவரும் ஆட்டமிழந்தார். அவர், 58 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 86 ரன்கள் குவித்தார்.

கடைசி லீக்: வெற்றி பெறுமா பெங்களூரு? முதல் முறையாக GT vs RCB பலப்பரீட்சை!

இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில்  விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் ஆடிய போது போட்டியில் தீபக் சாஹர் வீசிய 4.3 ஓவரில் டேவிட் வார்னர் ஒரு ரன்கள் எடுக்க ஓடி வந்தார். ஆனால், அப்போது மொயீன் அலி த்ரோ எறிந்தார் இதில், பந்து ஸ்டெம்பில் பட்டிருந்தால் வார்னர் ஆட்டமிழந்திருப்பார். அதில் தப்பிய அவர் மீண்டும் 2ஆவது ரன் எடுக்க ஆக்‌ஷன் செய்தார். அப்போது பந்தை பிடித்த ரஹானேவை த்ரோ வீசும்படி எதிர் திசையில் நின்றிருந்த ஜடேஜா வலியுறுத்தினார்.

டெல்லி, கொல்கத்தாவிற்கு ஆப்பு வச்ச ஹோம் மைதானம்; மும்பை, பெங்களூருக்கு எப்படியோ?

அதன்படி ரஹானேவும் பந்தை வீசினார். இதில், மீண்டும் வார்னர் இரண்டாவது ரன் எடுக்க முயற்சிப்பது போன்று ஆக்‌ஷன் செய்தார். ஜடேஜாவும் பந்தை வீசுவது போன்று ஆக்‌ஷன் செய்ய, வார்னரோ, ஜடேஜாவின் ஸ்டைலான வாள் சண்டை போடுவது போன்று கத்தி சண்டை செய்து காண்பித்தார். வார்னரின் இந்த செயல் ஜடேஜாவை வியக்க வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் போட்டியில் சென்னை வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு 2ஆவது அணியாக முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளே ஆஃப் போட்டியில் 3 டீம்: மும்பைக்காக விட்டுக்கொடுக்குமா ஹைதராபாத் ? இல்லை தன்னோடு கூட்டிச் செல்லுமா?

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios