பெங்களூருவில் ஆலங்கட்டி மழை: RCB vs GT போட்டி ரத்தானால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யபட வாய்ப்புள்ளது.

if Rain May intrupts RCB vs GT 70th IPL Match at Bengaluru then Who will entered into Play Offs?

பதினாறாவது ஐபிஎல் சீசனுக்கான கடைசி லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால், கண்டிப்பான முறையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

 

ஜடேஜா முன்பு வாள் சுற்றிக்காட்டிய டேவிட் வார்னர்; வைரலாகும் வீடியோ!

ஆனால், பெங்களூருவில் தற்போது வரையில் மழை பெய்து வருகிறது. மேலும், இரவு முழுவதும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை டாஸ் கூட போட முடியாமல் தொடர்ந்து மழை பெய்தால், இந்தப் போட்டி ரத்து செய்யப்படும். மேலும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும். அப்படி பகிர்ந்து வழங்கப்பட்டால், ஆர்சிபி 15 புள்ளிகள் பெறும்.

கடைசி லீக்: வெற்றி பெறுமா பெங்களூரு? முதல் முறையாக GT vs RCB பலப்பரீட்சை!

 

 

ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு 4ஆவது அணியாக தகுதி பெறும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோற்றாலும் சரி, மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு ஆர்சிபிக்கு ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டாலும் சரி, ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வாய்ப்பில்லை. இந்த தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

 

 

டெல்லி, கொல்கத்தாவிற்கு ஆப்பு வச்ச ஹோம் மைதானம்; மும்பை, பெங்களூருக்கு எப்படியோ?

குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து ஆர்சிபி தோற்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios