ஆர்சிபி ஐபிஎல் வெல்லும் வரையில் பள்ளியில் சேர மாட்டேன் – அடம் பிடிக்கும் சுட்டிக் குழந்தை!

ஆர்சிபி ஐபிஎல் வெல்லும் வரையில் பள்ளியில் சேர மாட்டேன் என்று எழுதிய வாசகம் கொண்ட பேனரை கையில் வைத்துள்ள குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Child Fan pose with I will not join school untill RCB Wins IPL which banner viral in social media

ஐபிஎல் திருவிழா நிறைவு பெறும் நேரம் வந்துவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. கடைசி இடத்திற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் இன்றைய போட்டிகளில் தோல்வி அடைந்தால் மட்டுமே அந்த வாய்ப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்லும்.

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை: RCB vs GT போட்டி ரத்தானால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று இரவு ஐபிஎல் கடைசி லீக் போட்டி நடக்கிறது. இதில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆர்சிபியின் பிளே ஆஃப் கனவு நிறைவேறும். ஆனால், தற்போது பெங்களூருவில் ஆலங்கட்டி மழை பெய்து வரும் நிலையில், இந்தப் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜடேஜா முன்பு வாள் சுற்றிக்காட்டிய டேவிட் வார்னர்; வைரலாகும் வீடியோ!

ஒருவேளை மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். இதன் மூலமாக ஆர்சிபி 15 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக, போட்டி நடந்து இதில், ஆர்சிபி தோல்வி அடைந்து மும்பை வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை முன்னேறும்.

கடைசி லீக்: வெற்றி பெறுமா பெங்களூரு? முதல் முறையாக GT vs RCB பலப்பரீட்சை!

இந்த நிலையில், இதுவரையில் ஒரு முறை கூட ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதில், இந்த சுட்டிக்குழந்தையும் ஒன்று. ஆர்சிபி ஐபிஎல் வெல்லும் வரையில் தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று எழுதிய பேனர் ஒன்றை கையில் வைத்தபடி இருக்கும் குழந்தையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த குழந்தையின் எதிர்காலத்திற்காகவது ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இந்த சீசனை ஆர்சிபி கைப்பற்ற வேண்டும்.

டெல்லி, கொல்கத்தாவிற்கு ஆப்பு வச்ச ஹோம் மைதானம்; மும்பை, பெங்களூருக்கு எப்படியோ?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios