முழங்காலில் காயமடைந்த விராட் கோலி: இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
ஆர்சிபியின் முக்கிய வீரரான விராட் கோலியின் முழங்கால் காயம் குறித்து பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் 16ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. நடப்பு ஆண்டுக்கான 16ஆவது சீசனின் கடைசி லீக் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதில், ஆர்சிபி ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் உறுதி என்ற நிலை இருந்தது. அதற்காகவும் போராடியது. முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 197 ரன்கள் எடுத்தது.
விரக்தியடைந்த ஆர்சிபி ரசிகர்கள்: சுப்மன் கில்லிற்கு கொலை மிரட்டல், மரணத்திற்கு வாழ்த்து!
இதில் விராட் கோலி 61 பந்துகளில் ஒரு சிக்ஸர் 13 பவுண்டரிகள் உள்பட 101 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஹர்திக் பாண்டியா, கில் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் குஜராத் 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர்சிபி தோல்வி அடைந்த சந்தோஷம், மும்பையின் பிளே ஆஃப் கனவு நிறைவேறிய மகிழ்ச்சி: கொண்டாடிய MI பாய்ஸ்!
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து இந்த முறையும் ஆர்சிபி தொடரிலிருந்து வெளியேறியது. போட்டியின் விஜயகுமார் வைஷாக் வீசிய 14.5ஆவது ஓவரில் விஜய சங்கர் ஆட்டமிழந்தார். இவரது கேட்சை விராட கோலி பிடித்தார். அப்போது விராட் கோலிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறினார். ஆனால், திரும்பவும் விராட் கோலி வரவில்லை.
ஆர்சிபியை வீட்டுக்கு அனுப்பி, மும்பைக்கு வழிகாட்டிய சுப்மன் கில்!
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், விராட் கோலிக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார். மேலும், கடந்த 4 நாட்களுக்குள் 2 சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக 40 ஓவர்கள் வரையில் களத்தில் நின்ற அவர் இந்தப் போட்டியில் 15 ஓவர்கள் வரையில் களத்தில் இருந்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் பங்களிப்பை அளிக்க கூடியவர்.
விராட் கோலிக்கு போட்டியாக சதம் அடித்த சுப்மன் கில்: ஆர்சிபியை விரட்டியடித்து குஜராத் வெற்றி!
இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதலால், வரும் ஜூன் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி கண்டிப்பாக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.