விரக்தியடைந்த ஆர்சிபி ரசிகர்கள்: சுப்மன் கில்லிற்கு கொலை மிரட்டல், மரணத்திற்கு வாழ்த்து!
குஜராத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், ஆர்சிபி தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த சுப்மன் கில்லிற்கு ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 16ஆவது சீசனின் கடைசி லீக் போட்டி நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய ஆர்சிபி 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
ஆர்சிபி தோல்வி அடைந்த சந்தோஷம், மும்பையின் பிளே ஆஃப் கனவு நிறைவேறிய மகிழ்ச்சி: கொண்டாடிய MI பாய்ஸ்!
பின்னர் கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக ஆடி 104 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆர்சிபியை வீட்டுக்கு அனுப்பி, மும்பைக்கு வழிகாட்டிய சுப்மன் கில்!
இதன் காரணமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 16ஆவது முறையாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியாகியுள்ளது. இதுவரையில் ஆர்சிபி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளே ஆஃப் கனவில் இருந்த ஆர்சிபி தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த சுப்மன் கில்லிற்கு ஆர்சிபி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆம், ஆர்சிபி தோல்வியை தாக்கிக்கொள்ள முடியாத ஆர்சிபி தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக சுப்மன் கில்லிற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
விராட் கோலிக்கு போட்டியாக சதம் அடித்த சுப்மன் கில்: ஆர்சிபியை விரட்டியடித்து குஜராத் வெற்றி!
மேலும், அவரது மரணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது, தீயில் கருகிய காரின் புகைப்படத்தை பதிவிட்டு இது போன்று உங்களது காரையும் தீக்கரையாக்குவோம் என்றும், உங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என்றெல்லாம் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இவ்வளவு ஏன், இனிமேல் உங்களது வாழ்க்கையில் நடக்கும் எல்லா அசம்பாவிதங்களுக்கும் எங்களது வேண்டுதல் தான் காரணமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி சுப்மன் கில்லின் சகோதரியை திருநங்கை என்று முத்திரை குத்தி வருகின்றனர்.