சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் மாதிரியை தோனிக்கு ரசிகர்கள் பரிசாக வழங்கிய புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் 16ஆவது ஐபிஎல் சீசனுக்கான சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். சாம்பியனுக்கான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. 

முழங்காலில் காயமடைந்த விராட் கோலி: இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியனாகியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால், பிளே ஆஃப் வரை சென்ற லக்னோ இன்னும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை.

விரக்தியடைந்த ஆர்சிபி ரசிகர்கள்: சுப்மன் கில்லிற்கு கொலை மிரட்டல், மரணத்திற்கு வாழ்த்து!

வரும் 23 ஆம் தேதி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் குவாலிஃபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு 2 ஆவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

ஆர்சிபி தோல்வி அடைந்த சந்தோஷம், மும்பையின் பிளே ஆஃப் கனவு நிறைவேறிய மகிழ்ச்சி: கொண்டாடிய MI பாய்ஸ்!

நாளை நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள தோனிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் மாதிரியை ரசிகர்கள் பரிசாக வழங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்சிபியை வீட்டுக்கு அனுப்பி, மும்பைக்கு வழிகாட்டிய சுப்மன் கில்!

மேலும், சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் மாதிரியை Chepauk Stadium Miniatureயை பார்க்கும் தோனியின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

View post on Instagram

View post on Instagram

View post on Instagram