நாளை காலை 4.30 மணிக்கு இங்கிலாந்து செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி!
நாளை காலை 4.30 மணிக்கு இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் செல்லும் இந்திய அணிக்கு விராட் கோலி தலைமை தாங்குகிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎல் ராகுல், கேஎஸ்ல் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனத்கட்.
ஒரு போட்டியில் மட்டும் ஜெயிச்சிட்டால் திரும்ப வந்திருவோம் – உண்மையான ரோகித் சர்மாவின் வாக்கு!
கேஎல் ராகுல், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். ஏற்கனவே கேஎல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் சுற்றை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து கடைசி அணியாக வெளியேறியது.
IPL 2023: மிடில் ஆர்டர் சரியில்லை; ஒரு போட்டியில் ஜெயித்தால் மீண்டு வருவோம்: ரோகித் சர்மா!
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக நாளை காலை 4.30 மணிக்கு முதல் பேட்ஜ் இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. இதற்கான இந்திய அணிக்கு விராட் கோலி தலைமை தாங்கி செல்கிறார். விராட் கோலி உடன் இணைந்து ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வரும் 29 ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறது.
ஆர்சிபி தோல்விக்கு யார் காரணம்? ஃபாப் டூப்ளெசிஸ் ஓபன் டாக்!