IPL 2023: மிடில் ஆர்டர் சரியில்லை; ஒரு போட்டியில் ஜெயித்தால் மீண்டு வருவோம்: ரோகித் சர்மா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்குப் பிறகு பேசிய ரோகித் சர்மா, நாங்கள் கூடுதலாக 30 முதல் 50 ரன்கள் வரையில் எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையிலான 12ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோர் தடையாக இருந்தனர். ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த போது துஷார் தேஷ்பாண்டே ஓவரில் கிளீன் போல்டானார்.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
இஷான் கிஷான் அடித்து ஆட முயற்சித்த போது ஜடேஜா ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வழக்கம் போல் சூர்யகுமார் யாதவ் சாண்ட்னர் ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்காத போது தோனி டி ஆர்எஸ்எடுக்க, பந்து கிளவுசில் பட்டது தெளிவாக தெரிந்தது.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
அதன் பிறகு நடுவர் அவுட் கொடுத்தார். இதையடுத்து வந்த திலக் வர்மா 22 ரன்னிலும், டிம் டேவிட் 31 ரன்னிலும், ரித்திக் ஷோகீன் 18 ரன் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புது வரவான ரஹானே சிறப்பாக பேட்டிங் ஆடி குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபெ வழக்கம் போன்று சிக்சர், பவுண்டரி அடித்துவிட்டு 28 ரன்களில் வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
மற்றொரு தொடக்கவீரர் ருத்துராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 ரன்னிலும், அம்பத்தி ராயுடு 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
இந்த தோல்விக்குப் பிறகு பேசிய ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: இந்தப் போட்டியில் ஓபனிங் நன்றாக இருந்தும், அதனை பெரிய அளவிற்கு நாங்கள் கொண்டு செல்ல வில்லை. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் கூடுதலாக 30 முதல் 40, 50 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
மிடில் ஆர்டரில் எங்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. அதற்கு காரணம் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் தான். அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். என்னதான் நாங்கள் புது புது விஷயங்கள் செய்தாலும் அது பலிக்காமல் போகிறது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்களால் நாங்கள் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டோம்.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
ஆனால், கண்டிப்பாக அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம். தோல்வியிலிருந்து நிறைய பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடா விட்டாலூம் சீனியர் வீரர்கள் என்னை உள்பட தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். 2 போட்டிகளில் இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளோம். ஒரு வெற்றி மட்டும் பெற்றுவிட்டால் அதிலிருந்து நாங்கள் மீண்டு வர முடியும் என்று கூறியுள்ளார்.