கோட்டையில் வரலாற்றை மாற்றியமைத்து 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற சிஎஸ்கே!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் பிளே ஆஃப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

CSK beat GT by 15 Runs Difference in Qualifier 1 at Chepauk Stadium Chennai

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் சுற்று போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 60 ரன்கள் சேர்த்தார். டெவான் கான்வே 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தோனி எனது நண்பர், சகோதரர்; நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - ஹர்திக் பாண்டியா!

பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமா சகா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 8 ரன்களிலும், தசுன் ஷனாகா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டேவிட் மில்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்தது. பின்னர் 30 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.

காஃபி மீதான தோனியின் காதல் பற்றி தெரியுமா? சுரேஷின் காஃபி மீது தோனி கொண்ட காதல்!

அதன் பிறகு வந்த விஜய் சங்கர் 14 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் திவேதியா 3 ரன்களில் வெளியேறினார். தர்ஷன் நீல்கண்டே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்து போராடி வந்த ரஷீத் கான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக குஜராத் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 11 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

அதிக விக்கெட்டு, அதிக ரன் பட்டியலிலும் டாப்பில் இருக்கும் குஜராத், அப்போ சிஎஸ்கே?

இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக இதுவரையில் நடந்த போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. தற்போது முதல் முறையாக குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றி பெற்று வரலாற்றை மாற்றியமைத்துள்ளது.

சிஎஸ்கே பற்றி நன்கு தெரிந்த சாய் கிஷோரை களமிறக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 10 ஆவது முறையாக சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. வரும் 28ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரஞ்சு கேப் வச்சிருந்தும் பிளே ஆஃப் வராமல் போன ஃபாப் டூப்ளெசிஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios