சேப்பாக்கதை விட இரவில் ஜொலிக்கும் நரேந்திர மோடி மைதானம் – வைரலாகும் வீடியோ!
குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 2ஆவது குவாலிஃபையர் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில் நரேந்திர மோடி மைதானம் இரவில் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் குவாலிஃபையர் 2 மற்றும் ஐபிஎல் இறுதிப் போட்டிகள் நடக்கிறது. அதுவும் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
Qualifier 2: 5 டைம்ஸ் சாம்பியனா? 1 டைம் சாம்பியனா? GT vs MI ரெக்கார்ட்ஸ் என்ன சொல்லுது?
அதற்கு முன்னதாக குஜராத்தின் பின்னணி பாடகியான கிஞ்சல் டேவின் கலை நிகழ்ச்சி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் 28 ஆம் தேதி நடக்க இருக்கும் இறுதிப் போட்டியிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டிவைன் மற்றும் கிங் இருவரது கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது.
WTC இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு: முதல் பரிசு ரூ.13.2 கோடி, 2ஆம் பரிசு ரூ.6.5 கோடி!
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தைவிட முக்கியமான 2 போட்டிகளுக்காக நரேந்திர மோடி மைதானம் பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று இரவு நடக்கும் 2ஆவது குவாலிஃபையர் மற்றும் 28ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டிக்காக மைதானம் பிரமாண்டமானதாக, ஜொலிக்கும் வகையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
MIயை பார்த்தால் பயமா இருக்கு; மும்பை மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது: டுவைன் பிராவோ!
தற்போது இரவில் ஜொலிக்கும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.