IPL 2023 Final CSK VS GT: மீண்டும் அதே மைதானம்: 2ஆவது முறையாக சாம்பியனாகுமா குஜராத்?
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. 2ஆவது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதையடுத்து தற்போது 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதில், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
2011ல் இதே நாளில் பெங்களூருவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!
குஜராத்தின் கோட்டை என்று சொல்லப்படும் அகமதாபாத் மைதானத்தில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இன்றிம் அதே மைதானத்தில் தான் இறுதிப் போட்டி நடக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் இரு அணிகளும் இதே மைதானத்தில் தான் மோதின. இதில், குஜராத் டைட்டன்ஸ் தான் வெற்றி பெற்றது.
பயிற்சி செய்ய மைதானத்திற்குள் ஸ்கூட்டரில் வந்த ரஷீத் கான் – வைரலாகும் வீடியோ!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 5 முறை சாம்பியனான அணி என்ற சாதனையை படைக்கும். மாறாக, குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றால் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சாதனையை சமன் செய்யும். மேலும், தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியனான அணி என்ற பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் 130 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் சாம்பியனானது. ஆனால், இந்த சீசனில் ஏற்கனவே சென்னையில் நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணியிடம் 15 ரன்களில் குஜராத் தோல்வி அடைந்தது. ஆனால், அதன் பிறகு அகமதாபாத்தில் நடந்த 2ஆவது குவாலிஃபையரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதன் காரணமாக இன்று நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, குவாலிஃபையரில் அடைந்த தோல்விக்கு பரிகாரம் தேடிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.