பயிற்சி செய்ய மைதானத்திற்குள் ஸ்கூட்டரில் வந்த ரஷீத் கான் – வைரலாகும் வீடியோ!
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பயிற்சிக்கு ஸ்கூட்டரில் வந்த ரஷீத் கான் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 16ஆவது சீசன் இன்று நடக்கும் இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது. கோலாகலம், பரபரப்பு, அதிரடி வானவேடிக்கை என்று எதிர்பார்ப்புகளை கடந்து இன்று இறுதிப் போட்டி நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் குஜராத் 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. சிஎஸ்கே 10ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. முதல் குவாலிஃபையர் போட்டியில் அடைந்த தோல்விக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி இந்தப் போட்டியில் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் ஹீரோ ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு திருமணம்: எப்போது தெரியுமா?
இரு அணிகளும் முதல் போட்டியில் மோதியைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியிலும் மோதுகின்றன. இந்த நிலையில், நரேந்திர மோடி மைதானத்தில் பயிற்சி செய்வதற்காக ரஷீத் கான், மோகித் சரமா ஆகியோர் ஸ்கூட்டரில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பவுலிங் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா ஸ்கூட்டரை ஓட்ட, மோகித் சர்மா மற்றும் ரஷீத் கான் இருவரும் பின்னால் அமர்ந்து மைதானத்திற்குள் ஸ்கூட்டரில் வலம் வந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.