ஐபிஎல் ஹீரோ ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு திருமணம்: எப்போது தெரியுமா?
சிஎஸ்கே தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் திருமணம் நடக்க இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி மிக பிரமாண்டமான முறையில் தொடங்கப்பட்டது. இதில், இடம் பெற்ற 10 அணிகளும் 16ஆவது ஐபிஎல் சாம்பியனுக்கான போட்டியில் இடம் பெற்று விளையாடின. ஆனால், தற்போது 2 அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில், இன்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், சிஎஸ்கே அணி இறுதிப் போட்டி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டும் ஒரு காரணம். இதுவரையில் 15 போட்டிகளில் 14 இன்னிங்ஸில் ஆடிய கெய்க்வாட் 564 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்துள்ளார். 4 அரைசதங்களும், 43 பவுண்டரிகள் மற்றும் 29 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதையடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் ஸ்டாண்ட்பை வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவருக்கு வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் திருமணம் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக அவர் 5ஆம் தேதி லண்டன் புறப்பட இருந்தார்.
WTC இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு: முதல் பரிசு ரூ.13.2 கோடி, 2ஆம் பரிசு ரூ.6.5 கோடி!
ஆனால், இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஒவ்வொரு வீரரும் தங்களை மாற்றிக் கொள்ள காலதாமதம் ஆகும். அதோடு, ரெட் பந்து பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும் என்பதால், அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து செல்கிறார். வரும் ஜூன் 7 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.