அட சூர்யகுமார் யாதவ்வும் விஜய் ரசிகரா...! ஃபிளைட்டில் வாரிசு படம் பார்த்து Vibe பண்ணும் SKY - வைரலாகும் வீடியோ

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விமானத்தில் செல்லும் போது தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தை பார்த்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

MI player Suryakumar yadav watching vijay's varisu movie

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரராக கலக்கி வருபவர் சூர்யகுமார் யாதவ். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்காக பல கடினமான இலக்குகளை தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் அசால்டாக சேஸ் செய்து மிரள வைத்தார் சூர்யா. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் சூர்யகுமார் யாதவ் 605 ரன்களை அடித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 5 அரை சதங்களும் அடங்கும்.

நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன் என்கிற இமாலய ஸ்கோரை அடித்தாலும், அதனை முடிந்த அளவுக்கு விரட்டி வந்தது மும்பை அணி. இதற்கு காரணம் சூர்யாகுமார் தான். அவர் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்து அவுட் ஆனார். அவர் மட்டும் இறுதிவரை நின்றிருந்தால், ஆட்டம் மும்பை பக்கம் சென்றிருக்கும் என்கிற நிலை தான் இருந்தது.

இதையும் படியுங்கள்... ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!

எலிமினேட்டர் போட்டியில் தோற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐபிஎல் இறுதிப்போட்டி கனவு முடிவுக்கு வந்தது. குஜராத் அணி உடனான தோல்வியால் தொடரிலிருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ். இருப்பினும் இதுவரை 5 கோப்பைகளை வென்ற ஒரே அணி என்கிற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

குஜராத் அணியுடனான தோல்விக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இன்று விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பினர். அப்போது விமானத்தில் செல்லும்போது சூர்யகுமார் யாதவ், நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்து ரசித்தபடி செல்வதை சக வீரர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள், இவரும் விஜய் ரசிகரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  இஷான் கிஷானை காயப்படுத்தி சொந்த அணிக்கே சூனியம் வச்ச கிறிஸ் ஜோர்டான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios