ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான பரிசுத் தொகை மும்பைக்கு ரூ.7 கோடி என்றும், லக்னோவிற்கு ரூ.6.5 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you Know How much IPL 2023 Prize Money? Check Details Winner, Runner, Orange and Purple Cap, Award Winner Prize Money

முதல் முதலாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது. அந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. முதல் 2 சீசன்களாக வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 4.8 கோடியும், 2ஆவது இடம் பிடித்த அணிக்கு ரூ.2.4 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த சின்ன இளவரசன் சுப்மன் கில்!

அதன் பிறகு, ஐபிஎல் கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்பு, ஸ்பான்ஸர்கள் காரணமாக பரிசுத் தொகையும் அதிகமாக வழங்கப்பட்டது. உலகளவில் முக்கியமான போட்டியாக கருதப்படும் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.20 கோடியும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நின்ன சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – First அண்ட் Final ஐபிஎல்!

மேலும், 3ஆவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், 4ஆவது இடம் பிடித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த சீசனுக்கு ரூ.46.50 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஸ்பான்ஸர்கள், ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு காரணமாக கூடுதலாக வழங்கப்படும் என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் என்று ஒவ்வொரு டீமா காலி செய்த சுப்மன் கில்: நெக்ஸ்ட் சிஎஸ்கேயா?

அதுமட்டுமின்றி அதிக ரன்கள் எடுத்தவர்கள் (ஆரஞ்சு கேப்), அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு (பர்பிள் கேப்) தலா ரூ.15 லட்சமும், வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு ரூ.20 லட்சமும், மதிப்புமிக்க வீரருக்கான விருதுக்கு ரூ.12 லட்சமும், சூப்பர் ஸ்டிரைக்கர் விருதுக்கு ரூ.15 லட்சமும், கேம் சேஞ்சர் விருதுக்கு ரூ.12 லட்சமும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்மா: தலைகீழாக மாறிய மும்பை இந்தியன்ஸ் போட்டி – எலிமினேட்டர் vs குவாலிஃபையர் 2!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் ரூ.20 கோடி கிடைக்கும். மாறாக குஜராத் வெற்றி பெற்றால் ரூ.20 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடி மேல் அடி வாங்கி பரிதாபமாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios