ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த சின்ன இளவரசன் சுப்மன் கில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில் 129 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட் 128 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்.

Subman Gill broke Rishabh Pant Century Record in IPL History

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நின்ன சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – First அண்ட் Final ஐபிஎல்!

அதன்படி முதலில் ஆடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் எடுத்துக் கொடுத்ததன் மூலமாக அந்த அணி 233 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் கில் 129 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் எடுத்த 128 ரன்கள் (நாட் அவுட்) சாதனையை முறியடித்துள்ளார்.

ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் என்று ஒவ்வொரு டீமா காலி செய்த சுப்மன் கில்: நெக்ஸ்ட் சிஎஸ்கேயா?

இதற்கு முன்னதாக ஆர்சிபி அணிக்கு எதிராக சுப்மன் கில் 104 ரன்கள் (நாட் அவுட்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 101 ரன்கள் எடுத்துள்ளார். இப்படி ஒரே சீசனில் 3 முறை சதம் அடித்து அசத்தியுள்ளார். நாளை சென்னைக்கு எதிராக நடக்கும் இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் ஒரு சீசனில் 4 சதங்கள் அடித்த விராட் கோலியின் சதம் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்மா: தலைகீழாக மாறிய மும்பை இந்தியன்ஸ் போட்டி – எலிமினேட்டர் vs குவாலிஃபையர் 2!

ஐபிஎல் பிளே ஆஃப்பில் படைக்கப்பட்ட சாதனைகள்:

அதிகபட்ச ரன்கள்:

233/3 குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – அகமதாபாத் – 2023

226/6 பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை – 2014

222/5 சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் – சென்னை – 2012

அடி மேல் அடி வாங்கி பரிதாபமாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:

 

 

973 ரன்கள் – விராட் கோலி – ஆர்சிபி – 2016

863 ரன்கள் – ஜோஸ் பட்லர் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 2012

851 ரன்கள் – சுப்மன் கில் – குஜராத் டைட்டன்ஸ் – 2023

848 ரன்கள் - டேவிட் வார்னர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 2016

735 ரன்கள் – கனே வில்லியம்சன் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 2018

 

ஐபிஎல் சீசனில் அதிக பவுண்டரிகள் (4, 6) எடுத்த வீரர்கள்:

128 – ஜோஸ் பட்லர் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 2022

122 – விராட் கோலி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 2016

119 – டேவிட் வார்னர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 2016

111 – சுப்மன் கில் – குஜராத் டைட்டன்ஸ் – 2023

ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:

10 - சுப்மன் கில் – குஜராத் டைட்டன்ஸ் – 2023, குவாலிஃபையர் 2

8 – விருத்திமான் சஹா PBKS vs KKR, பெங்களூரு, 2014 Final

8 – கிறிஸ் கெயில் RCB vs SRH, பெங்களூரு, 2016 Final

8 – விரேந்திர சேவாக் PBKS vs CSK, Mumbai WS, 2014 Q2

8 – ஷேன் வாட்சன் CSK vs SRH, Mumbai WS, 2018 Final

ஐபிஎல் பிளே ஆஃபில் தனி ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்:

129 – சுப்மன் கில் GT vs MI, Ahmedabad, 2023 Q2

122 – விரேந்திர சேவாக் PBKS vs CSK, Mumbai WS, 2014 Q2

117* - ஷேன் வாட்சன் (CSK) vs SRH, Mumbai WS, 2018 Final

115* - விருத்திமான் சஹா (PBKS) vs KKR, Bengaluru, 2014 Final

 

ஐபிஎல், அதிக ஸ்கோர் எடுத்த இந்திய வீரர்கள்:

132* - கேஎல் ராகுல் (PBKS) vs RCB, துபாய், 2020

129 – சுப்மன் கில் (GT) vs MI, Ahmedabad, 2023

128* - ரிஷப் பண்ட் (DC) vs SRH, Delhi, 2018

127 – முரளி விஜய் (CSK) vs RR, Chennai, 2010

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios