WTC Final: திருமணம் காரணமாக விலகிய ருத்துராஜ் கெய்க்வாட்: Standby பிளேயராக இடம் பிடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
அதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎல் ராகுல், கேஎஸ்ல் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஸ்டாண்ட்பை வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
WTC இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு: முதல் பரிசு ரூ.13.2 கோடி, 2ஆம் பரிசு ரூ.6.5 கோடி!
நடந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் ஏற்பட்ட காயம் காரணமாக கேஎல் ராகுல் மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர். மேலும், கேஎல் ராகுல் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து விலகினார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் அறிவிக்கப்பட்டார்.
தற்போது இஷான் கிஷானும் குவாலிஃபையர் 2ஆவது போட்டியின் போது கண் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் பேட்டிங் ஆட வரவில்லை. இதன் காரணமாக அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், வரும் ஜூன் 3 மற்று 4 ஆம் தேதிகளில் ருத்துராஜ் கெய்க்வாட் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், அவர், ஜூன் 5 ஆம் தேதி லண்டன் புறப்பட இருந்துள்ளார். ஆனால், இங்கிலாந்து சுழ்நிலை மற்றும் பயிற்சி காரணமாக அவருக்குப் பதிலாக மாற்று வீரரை அனுப்பி வைக்குமாறு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேர்வுக் குழுவை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!
இதன் காரணமாக ருத்துராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்டாண்ட்பை வீரராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இணைந்துள்ளார். அதுவும் ஸ்டாண்ட்பை வீரராக இணைந்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் லண்டனுக்கு புறப்பட்டுச் செல்கிறார். ஜெய்ஸ்வால் இங்கிலாந்து விசா வைத்திருப்பதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று அவர் 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்துள்ளார். அதோடு ரஞ்சி டிராபியின் 4 போட்டிகளில் அவர் 404 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கனவே ராகுல் டிராவிட், அக்ஷர் படேல், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், விராட் கோலி ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர்.
என்னயவா அணியிலிருந்து தூக்குனீங்க: 5 விக்கெட் கைப்பற்றி மாஸ் காட்டிய மோகித் சர்மா!
இவர்களைத் தொடர்ந்து, ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோர் உள்பட சில வீரர்கள் இன்று லண்டன் செல்கின்றனர். இன்று இரவு ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில், அது முடிந்த பிறகு முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில் ஆகியோர் வரும் 30 ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் செல்கின்றனர்.