என்னயவா அணியிலிருந்து தூக்குனீங்க: 5 விக்கெட் கைப்பற்றி மாஸ் காட்டிய மோகித் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

Gujarat Titans Player Mohit Sharma Take 5 Wickets against Mumbai Indians in Qualifier 2 at Ahmedabad

கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் மோகித் சர்மா ஏலம் எடுக்கப்படவில்லை. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மூலமாக ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், முதலில் நடந்த 3 போட்டிகளில் மோகித் சர்மா இடம் பெறவில்லை. அதன் பிறகு குஜராத் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

இஷான் கிஷானை காயப்படுத்தி சொந்த அணிக்கே சூனியம் வச்ச கிறிஸ் ஜோர்டான்!

இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அந்த ஆண்டு விளையாடினார். 2020 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ50 லட்சம் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக விளையாடினார்.

ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!

அதன் பிறகு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில், தான் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ளா மோகித் சர்மா 41.1 ஓவர்கள் வீசி 325 ரன்கள் கொடுத்து 24 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த சின்ன இளவரசன் சுப்மன் கில்!

நேற்று நடந்த 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2.2 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அதிலேயும், சூர்யகுமார் யாதவ், விஷ்ணு வினோத், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயே ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நின்ன சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – First அண்ட் Final ஐபிஎல்!

ஆனால், சென்னை அணியில் இடம் பெற்ற பந்து வீச்சாளர்கள் கூட ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கு முன்னதாக சென்னை அணியில் இடம் பெற்ற விளையாடி வந்த மோகித் சர்மா, சென்னைக்கு சவால் விடும் வகையில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்மா: தலைகீழாக மாறிய மும்பை இந்தியன்ஸ் போட்டி – எலிமினேட்டர் vs குவாலிஃபையர் 2!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios