2011ல் இதே நாளில் பெங்களூருவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!
கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் சிஎஸ்கே அணி 2ஆவது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியனானது. அடுத்த ஆண்டில் டெக்கான் சார்ஜஸ் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதையடுத்து தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 2010 ஆம் ஆண்டு முதல் முதலாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
பயிற்சி செய்ய மைதானத்திற்குள் ஸ்கூட்டரில் வந்த ரஷீத் கான் – வைரலாகும் வீடியோ!
இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி தொடர்ந்து 2ஆவது முறையாக சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு சென்றது. அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக முரளி விஜய் 95 ரன்கள் எடுத்தார். மைக்கே ஹஸ்ஸி 63 ரன்கள் குவித்தார்.
பின்னர், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதில், முரளி விஜய் ஆட்டநாயகனாகவும், கிறிஸ் ஜெயில் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதே நாளில் இறுதிப் போட்டிக்கு சென்ற சிஎஸ்கே அணி இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில், வெற்றி பெற்றால் 2ஆவது முறையாக இதே நாளில் சாதனை படைத்த அணியாக சிஎஸ்கே அணி திகழும். மேலும், 5ஆவது முறையாக சாம்பியனாகி மும்பையின் சாதனையை சமன் செய்யும். தோனியின் தலைமையில் 5ஆவது முறையாக சிஎஸ்கே சாம்பியான் என்ற சாதனையையும் படைக்கும்.
ஐபிஎல் ஹீரோ ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு திருமணம்: எப்போது தெரியுமா?