Asianet News TamilAsianet News Tamil

9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

After Loss in 66th IPL Punjab Kings out for the 9th consecutive season in IPL
Author
First Published May 20, 2023, 9:52 AM IST

தர்மசாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான 66ஆவது ஐபிஎல் போட்டி நடந்தது. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீசியது. அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி 2 ஓவர்களில் 46 ரன்கள் சேர்க்கவே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதில், சாம் கரண் 49 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 44 ரன்களும், ஷாருக்கான் 41 ரன்களும் எடுத்தனர்.

பஞ்சாப்பை துரத்தியடித்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.  சஞ்சு சாம்சன் 2 ரன்னில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 51 ரன்னும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்னும், ஷிம்ரான் ஹெட்மயர் 46 ரன்னும் எடுக்கவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிறு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

WTC Final - 3 பேட்ஜாக லண்டன் புறப்படும் டீம் இந்தியா!

இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது. ஏற்கனவே 5ஆவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து 3ஆவது அணியாக வெளியேறியது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 9ஆவது சீசனாக பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு எதிராக ஜெர்சியை மாற்றி விளையாடும் டெல்லி: ரெயின்போ ஜெர்சி ராசி!

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் 14 போட்டிகளில் 6ல் வெற்றியும், 8ல் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் பெற்று 8ஆவது இடம் பெற்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் 2ஆவது இடம் பிடித்தது. 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் சீசனில் 2ஆம் இடம் (ரன்னர் அப்) பிடித்தது. அதன் பிறகு ஒரு சீசனில் கூட பிளே ஆஃப் சுற்றுக்குள் கூட பஞ்சாப் கிங்ஸ் செல்லவில்லை. தொடர்ந்து 9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

மும்பை மற்றும் பெங்களூரு தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வாய்ப்பு!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios