நாம் தமிழர் சீமான் இஸ்லாம் மதத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். 

’’முதல் சங்கத் தமிழ்ச் சங்கத்தின் தலைவன் ஆதி சிவனை வணங்கி, குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகனை அருளோடு, ஆறு மணி கட்டி வாழ்ந்த எங்களின் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆசியோடு, எனது குடும்பத்தின் மூத்த அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வாழ்த்துக்களுடன் முகமது இஸ்மாயில்-  ஷகிலா பானு ஆகியோரின் மகனாகிய சதாம் உசேன் ஆகியன நான், ஆதிமூலம் - மகேஸ்வரி ஆகியோரின் மகளாகிய துர்கா தேவியை என் வாழ்வின் நல் வாழ்க்கை துணையாக ஏற்கிறேன் என இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பி ஒருவர் மணம் முடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் இதுபோன்ற திருமணங்களுக்கும், அதனை நடத்தி வைக்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும்  இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது அபுசாலிஹ் உலவி கூறுகையில், ‘’இதன் குறிக்கோள் முஸ்லிம்கள்தான்.  இஸ்லாம் மதத்தை குறிவைத்து எல்லோரும் இஸ்லாத்தில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும். தாய் மதம் சைவ மதம். அதற்கு நீங்கள் திரும்ப வேண்டும். அந்த அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி வழிநடத்தக் கூடிய ஒரு விஷயத்தை சீமான் என்கிற ஒரு ஆள் செய்து வருகிறார். அதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு திருமண வீடியோ ஒன்று பரவிக் கொண்டிருக்கிறது.

 நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவன் உறுதிமொழி படிக்கிறான். சிவனுடைய ஆசியோடு ஒருத்தன் கல்யாணம் செய்கிறான். அந்த திருமணம் சீமான் முன்னிலையில்தான் நடக்கிறது. இவ்வளவு மோசமாக முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். பிஜேபிக்கு கண்டனம் தெரிவிப்பதாக நாலு வார்த்தைகள் கத்தி பேசி சீமான் பொய் சொல்லி வருகிறார். 

பாஜகவிடம் மென்மையான போக்கை காட்டி மற்ற மதத்தினரை ஏமாற்றுகிறார் சீமான். தமிழக அரசியல்வாதிகளில் அதிக பொய் சொல்பவராக ஒருவர் இருந்தால் அவர் சீமானாகத்தான் இருப்பார். கூச்ச நாச்சம் இல்லாமல் பொய் சொல்வார். அதனையும் கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அதெல்லாம் பிரச்சனை கிடையாது.

நீங்கள் எல்லாம் சமூக மக்களின் இஸ்லாத்தை விட்டு அப்புறப்படுத்துவதற்கு தமிழர் என்கிற அமைப்பை வைத்து நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். தமிழ்குடி என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றும் இவர்களை எத்தனை நாட்களுக்கு நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட ஆட்களை நீங்கள் இஸ்லாமிய பிரச்சனைகளுக்கு பேச கூப்பிடுவது நியாயமா? அவர் தோல் கொடுப்பார் என நீங்கள் இடம் கொடுப்பதால்தான் இதெல்லாம் நடந்து வருகிறது. அவர் ஆள் பிடிப்பதற்கு வழிவகுத்து கொடுக்கிறீர்கள். இனிமேல் சீமான் இஸ்லாம் மதத்தில் புகுந்துவிளையாடுவதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என்கிற முடிவுக்கு நீங்கள் வரவேண்டும்’’என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  https://www.facebook.com/groups/1820124478219999/permalink/2706355222930249/

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது அபுசாலிஹ் உலவி 2018ல் எழுதிய ஒரு கடிதமும் உலவி வருகிறது. அதில் முஹம்மது பாரூக்- ஹயாத்துன்னிஷா ஆகியோரின் மகள் யாஸ்மினா என்கிற பெண்ணை கார்த்திகேயன் என்ற மாற்று மத சகோதரருடன் திருமணம் நடப்பதாக சமூகவலைதளங்களில் மிக வேகமாக திருமண அழைப்பிதழ் ஒன்று பரவி வருகிறது. இந்த திருமணம் இஸ்லாமிய ஷரீஅத் பார்வையில் முறையான திருமணமே கிடையாது. மாறாக விபச்சாரமாகும். இதுபோன்ற திருமணங்கள் ஜமாத் கட்டமைப்பை சிதப்பதாஅவும் இருக்கிறது. எனவே எதிர்வரும் காலங்களில் இளைய தலைமுறையினர் இதுபோன்ற இழி  செயல்களில் ஈடுபடாமல் இருக்க தங்களூர் ஜமாத்தார்களை ஒன்று கூட்டி கடுமையான சட்டத்தை இயற்றி செயல்படுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.