சீமானும் அண்ணாமலையும் Shadow Fighers. அவர்கள் நிழலோடு யுத்தம் செய்பவர்கள் என்று அமைச்சர் சேகர்பாபு காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
Sekar Babu reacts to Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றிரவு சென்னையில் நடந்த பாஜக நிர்வாகி இல்லத் திருமணவிழாவில் பங்கேற்றார். அதற்கு முன்பாக, காரில் அமர்ந்திருந்த சீமானை கண்டதும் அவரை நோக்கிச் சென்று, கைகுலுக்கினார் அண்ணாமலை.
அப்போது அண்ணாமலை சீமானை நோக்கி " Fight பண்ணுங்கண்ணா, Strong ஆ இருங்க. விட்டுடாதிங்கண்ணா" என்று கூறிவிட்டுச் சென்றார். சீமான் - அண்ணாமலையின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இந்த நிலையில், இருவரின் சந்திப்பை விமர்சனம் செய்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு. சென்னை கிழக்கு திமுக மாவட்டம் சார்பாக, எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சூளை பகுதிகளில் 'அன்னம் தரும் அமுதக்கரங்கள்; நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
இதில், பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
சீமான், அண்ணாமலை இரண்டு பேரும் Shadow fighters. அவர்கள், நிழலோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்; நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். அவர்களது யுத்தத்திற்கும், திமுகவின் யுத்தத்திற்கும் பல மாறுபாடுகள் வேறுபாடுகள் உள்ளன.
'Fight பண்ணுங்கண்ணா...' சீமானை திடீரென சந்தித்த அண்ணாமலை! பாஜக- நாதக நெருங்கி வரும் பின்னணி!
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிட்ட இடங்களில் நடத்துவதற்கு, திமுக ஆட்சியில் அனுமதி அளிப்பது போல், வேறு எந்த ஆட்சியில் அனுமதித்ததில்லை. அதே நேரத்தில் போராட்டம் என்ற போர்வையில் மக்களுக்கு இடையூறு ஏற்படும்போது அதற்கு தகுந்தார்போல் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு அரசை குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல.
கோவிலில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை வழிபாட்டை தடுக்கவில்லை. அதே நேரத்தில் அன்னைத் தமிழ் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தமிழில் அர்ச்சனை செய்யும் போது அர்ச்சனை சீட்டுக்கான கட்டணத்தில் 60% ஈட்டுத்தொகை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; ஒரு மொழியை திணிக்கின்றபோது தான் எதிர்த்து நிற்கிறோம். தமிழும் அந்த வகை அர்ச்சனையில் இருக்கும். எங்களுக்கு எங்கள் தமிழ் மொழி பல்லாயிரம் நெடுங்கால பன்மையான தொன்மையான மொழி. 2026 தேர்தலில் இந்தி திணிப்பவர்கள் மீது மக்கள் அந்த வெறுப்பை காட்டுவார்கள். இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.
திமுகவின் சகுனி அமைச்சர் சேகர்பாபு! பாஜக, அண்ணாமலையை விமர்சிக்க தகுதியில்லை! சொல்வது யார் தெரியுமா?
