ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்த காஜல் பார்மர் என்ற 24 வயது இளம்பெண், மன்சுக் ஆதோஜா என்ற 52 வயது தொழிலதிபருக்கு பேஸ்புக் மூலம் ஓராண்டுக்கு முன் அறிமுகம் ஆகியுள்ளார். பேஸ்புக் சேட்டிங் பின்னர் போனில் தொடர்ந்து இருவரும் பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் பேசிக்கொள்ளும் அளவிற்கு பழக்கம் வளர்ந்தது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு, தனது வீட்டுக்கு வந்த தொழில் அதிபர் மன்சுக்குடன் காஜல் பார்மர் படுக்கையை பகிர்ந்துள்ளார்.

 சில நாட்களுக்கு முன்பு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தொழில் அதிபரை சந்தித்துள்ளார் காஜல். இதனை உண்மை என்று நம்பி அவரை மருத்துவமனைக்கு அழைத்தச் சென்றுவிட்டு மீண்டும் அவரது வீட்டில் இறக்கிவிட சென்றுள்ளார். அப்போது மன்சுக்கை தனது வீட்டிற்குள் வருமாறு காஜல் அழைத்துள்ளார். விபரீதத்தை உணராமல் உள்ளே சென்ற மன்சுக்குடன் காஜல் மீண்டும் படுக்கையை பகிர்ந்துள்ளனர்.

படுக்கையில் உல்லாசமாக இருப்பதை தனது செல்போன் கேமரா மூலம் மன்சுக் ஆதோஜாவுக்கு தெரியாமல் படம்பிடித்த காஜல், சில நாட்களுக்குப் பிறகு அந்த வீடியோவை தொழிலதிபர் மன்சுக் ஆதோஜாவுக்கு அனுப்பியுள்ளார். வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி கேட்ட அந்த பெண், கேட்ட பணத்தை தராவிட்டால், வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவதுடன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறி காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, மோர்பி குற்றப்பிரிவு காவல்துறையில் தொழிலதிபர் மன்சுக் ஆதோஜா புகார் அளித்ததால், இளம்பெண் காஜல் பார்மரை கைது செய்த காவல்துறையினர், மிரட்டி பணம் பறிக்க உதவியாக இருந்த ஆண் ஒருவரையும் கைது செய்தனர்.