MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • AR Rahman: ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்'... டிக்கெட் தொகையோடு ரூ.67 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!

AR Rahman: ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்'... டிக்கெட் தொகையோடு ரூ.67 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!

ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சியை பார்க்க கரூரை சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வந்தும், பார்க்கமுடியால் திரும்பிய நிலையில், இவருக்கு ஏசிடிசி நிறுவனம் 67,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.  

2 Min read
Author : manimegalai a
Published : May 03 2024, 08:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AR Rahman

AR Rahman

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'மறக்குமா நெஞ்சம்' என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில் மழை கொட்டி தீர்த்ததால் நிகழ்ச்சி தடைபட்டது. இதைத்தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
AR Rahman

AR Rahman

தகுந்த முன்னேற்பாடுகளுடன் செப்டம்பர் மாதம் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி சென்னை ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் நடைபெற இருந்த நிலையில், நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினர். 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிட்ட பட்ட நிலையில், கூடுதலாக பலர் அங்கு திரண்டதால் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் நிற்க கூட இடமில்லாமல் அவதிப்படும் சூழல் உண்டானது.  பலர் கூட்ட  நெரிசலில் சிக்கியது மட்டுமின்றி, சிலர் இந்த கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிதாமகன் கெட்டப்புக்கு மாறிய கவின்! நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தின் கலக்கல் டீசர்

34
ACTC

ACTC

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாத ஏ சி டி சி நிறுவனத்தின் அஜாக்கிரதை தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. மேலும் நிகழ்ச்சியை காண வந்தும் பார்க்க முடியாமல் திரும்பிய சுமார் 4000 பேருக்கு, ஏ ஆர் ரகுமான் அவர்களின் டிக்கெட் பணத்தை திரும்ப வழங்கினார்.
 

44
Compensation 67 thousand

Compensation 67 thousand

ஆனால் அஸ்வின் மணிகண்டன் என்பவர், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஏ சி டி சி நிறுவனத்தின் மீது வழக்கு  ஒன்றை தொடர்ந்தார். அதில் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை பார்க்க குடும்பத்தோடு சென்றதாகவும், நிகழ்ச்சியை காண முடியாததால் திரும்பிய நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ சி டி சி நிறுவனம்தனக்கு டிக்கெட் தொகை ரூபாய் 12000, இழப்பீடு 50,000, மற்றும் வந்து சென்ற செலவுக்கான தொகை 5,000 என மொத்தம் 67 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த குறைதீர் ஆணையம், டிக்கெட் தொகையுடன் சேர்த்து 67,000 இழப்பீடு வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

'வேட்டையன்' பட பிடிப்பில் கோட்டு சூட்டில் கலக்கும் தலைவர்.. அமிதாப் பச்சனுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரல்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஏ. ஆர். ரகுமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved