கலைக்கப்பட்ட கருவை பையில் வைத்து எடுத்துக் கொண்டு, பாலியல் வல்லுறவு புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணால்  பஐம் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கொட்வாலி என்னும் பகுதியைச் சேர்ந்த  இளம் பெண் ஒருவர் தனது தாயுடன் பை ஒன்றையும் எடுத்துச் சென்று, ஹசன்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் மனோஜ்  என்னும் வாலிபர் தன்னை 5 மாதங்களுக்கு முன் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டார் என்றும் இதனால் தான் கர்ப்பம் ஆனேன் என தெரிவித்துள்ளார்.

தன்னைக் கட்டாயப்படுத்தி மனோஜ் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் என்றும் அந்த இளம்பெண் புகார் கூறியுள்ளார். அத்துடன் தான் கொண்டு சென்றிருந்த பையை அங்கிருந்த காவலர்களிடம் காண்பித்துள்ளார். அந்தப் பையில் கலைக்கப்பட்ட கருப்பிண்டம் இருந்ததைக் கண்ட காவல் துறையினர் அதிர்ந்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் உடனடியாக கருவைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் மனோஜ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவரைத் தேடும் பணியினைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கருக்கலைப்புத் தொடர்பான வழக்கு ஒன்றையும் காவல் துறை பதிவு செய்துள்ளது. தற்போது அந்தப் பெண் உள்ளூர் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அதிகபட்ச குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளது.