MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Top 10 Serial TRP: தடாலடியாக சன் டிவி சீரியல்களை TRP-யில் பின்னுக்கு தள்ளி... டாப்புக்கு வந்த விஜய் டிவி தொடர்

Top 10 Serial TRP: தடாலடியாக சன் டிவி சீரியல்களை TRP-யில் பின்னுக்கு தள்ளி... டாப்புக்கு வந்த விஜய் டிவி தொடர்

இந்த வாரம் டிஆர்பி தரவரிசை பட்டியலில், டாப் 10 இடத்தை பிடித்த முக்கிய சீரியல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

3 Min read
manimegalai a
Published : Apr 26 2024, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

2024 ஆம் ஆண்டின், 16வது வாரத்தில் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்க பெண்ணே' சீரியல், 9. 26 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆனந்தி அன்பு தான், தன்னுடைய காதலன் அழகன் என்பதை அறிந்து கொள்வாரா? அவருக்கு மகேஷால் நடந்த துயர சம்பவம் தெரிய வந்தால் அதை ஆனந்தி எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என்கிற பரபரப்பான கதைகளத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

210

இதைத்தொடர்ந்து 'கயல்' சீரியல் 9.5 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரம் முழுக்க எழில் மற்றும் கயலின் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற உள்ளதாகவும், இதில் கயல் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேற உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Samantha : விவாகரத்து ஆனாலும்... திருமண ஆடையை தூக்கிப் போட மனமின்றி; வெட்டிங் டிரெஸை வேறலெவலில் மாற்றிய சமந்தா

310

மேலும் இந்த வாரம், டாப் 5 பட்டியலில் இடம்பிடிக்கும் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி TRP-யில் மளமளவென முன்னேறி 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது 'சிறகடிக்க ஆசை' சீரியல். 8.18 புள்ளிகளுடன் புள்ளிகளை இந்த சீரியல் பெற்றுள்ள நிலையில், நாளுக்கு நாள் எதிர்பாராத பல்வேறு திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவதால், இந்த சீரியலுக்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். விஜயாவிடம் இருந்து தப்பிக்க ரோகினி சொன்ன பொய், தற்போது அவருக்கே பிரச்சனையாக மாறி நல்ல சாப்பாடு கூட சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். அதே போல் ஜீவாவிடம் இருந்து ரோகிணியும் - மனோஜும் 14 லட்சம் பணத்தை மீட்பார்களா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

410

இந்த வாரம் நான்காவது இடத்தில், 'எதிர்நீச்சல்' தொடர் 8 புள்ளிகளுடன் உள்ளது. தர்ஷினிக்கு திருமணம் நடக்க கூடாது என்பதில், குணசேகரனின் ஒட்டு மொத்த குடும்பமும்... அவருக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், இன்று திருமணத்தை நிறுத்த ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஆகியோர் செல்லும் நிலையில் என்ன நடக்க போகிறது என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Shruti Haasan Breakup: புகைப்படங்களை நீக்கி... சாந்தனுவுடனான பிரேக்கப்பை உறுதி செய்தாரா ஸ்ருதிஹாசன்?

510

அதே போல் இந்த வாரம், ஐந்தாவது இடத்தில் 7. 41 புள்ளிகள் உடன் வானத்தைப்போல சீரியல் உள்ளது. பொன்னியின் சூழ்ச்சியில் சிக்கி,  சூழ்நிலை கைதியாகில் நிற்கும் துளசி... வீடு கட்டி தருவதாக மோசடி செய்து வரும் கும்பலிடம் இருந்து எப்படி தப்பிக்க போகிறார்? சின்ராசுவை மோசடி கும்பல் கடத்தி வைத்துள்ள நிலையில், இவருக்கு பக்க பலமாக இருக்க போவது யார்... எப்படி என்கிற மிகப்பெரிய கேள்விகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

610

ஆறாவது இடத்தில் 6.98 டிஆர்பி புள்ளிகளுடன் சுந்தரி சீரியல் உள்ளது. தமிழின் பிறந்தநாளில் கார்த்தி தான் தமிழின் தந்தை என்கிற உண்மையை கூற உள்ள நிலையில், இதை தமிழ் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்? சுந்தரியை விட்டு தமிழ் பிரிக்கப்படுவாரா...  சுந்தரிக்கும் விஜய்க்கும் திருமணம் நடக்குமா?  என்கிற பரபரப்பான காட்சிகளுடன் இந்த தொடர் ஓடிக்கொண்டுள்ளது.

Ramya Krishnan Net Worth: 53 வயதிலும் மகாராணி போல் வாழும் ரம்யா கிருஷ்ணா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

710
Iniya Serial

Iniya Serial

இந்த வாரம் ஏழாவது இடத்தில் 6.76 புள்ளிகளுடன் உள்ளது இனியா சீரியல். இனியாவை சுற்றி பல சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவை அனைத்திலும் இருந்து விக்ரம் இனியாவை காப்பாற்றுகிறார். ஒரே போன்ற கதைக்களம் பல வாரங்களாக ஓடி வருவதால்... கடந்த வாரத்தை விட இந்த வாரம் TRP-யில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது இனியா தொடர்.
 

810

எட்டாவது இடத்தில், 6.64 புள்ளிகளுடன் விஜய் டிவியில் பரபரப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடர் உள்ளது.  பேரா குழந்தைகள் எடுத்த பின்னர், கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா கர்ப்பமாகி உள்ள நிலையில், இந்த விஷயத்தை கோபி செல்லவும் முடியாமல்... தவித்து வருகிறார். இந்த விஷயம் தெரியவந்தால் இதனை அவரின் குடும்பத்தினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை அறிய... சீரியல் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

Ghilli Box Office: 20 வருஷம் கழித்து ரீ-ரிலீஸ்... சொல்லி அடிக்கும் கில்லியின் வசூல் சாதனை!

910

இந்த வாரம் 6. 41 புள்ளிகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சரவணன் திருமணத்தை நிறுத்த, திட்டம் போட்டு பாண்டியனின் மூன்று மகன்களையும், கோமதியின் அண்ணன்கள் சிறையில் தள்ளி உள்ள நிலையில், அவை அனைத்தையும் கடந்து இவர்கள் வெளியே வருவார்களா?என்கிற பரபரப்பான கதைகளத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

1010
Karthigai deepam serial

Karthigai deepam serial

இதை தொடர்ந்து, 10-ஆவது இடத்தில்... ஜீ தமிழ் சூப்பர் ஹிட் சீரியலான 'கார்த்திகை தீபம்' தொடர் 5.54 புள்ளிகளுடன் உள்ளது. இந்த சீரியல் நாளுக்கு நாள் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தீபா - கார்த்தியின் ரொமான்ஸ் சீன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிகிறது. 

Madonna: படு ஹாட்டான ஸ்டன்னிங் உடையில்... பாத் டப்பின் மேல் அமர்ந்து போஸ் கொடுத்த நடிகை மடோனா செபாஸ்டியன்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
சிறகடிக்க ஆசை
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved