Asianet News TamilAsianet News Tamil

`மக்கள் பார்க்க வேண்டியது 22 ஆண்டு குஜராத் பற்றி தான், என்னை பற்றி அல்ல' செக்ஸ் மேட்டரில் சிக்கிய ஹர்திக் படேல் தாக்கு!

People want to watch 22 years old about Gujarat not a 22 year old boy
People want to watch 22 years old about Gujarat not a 22 year old boy
Author
First Published Nov 15, 2017, 7:07 PM IST


குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகால பா.ஜ.க.ஆட்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றிய வீடியோவைப் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்களே ஒழிய 22 வயது பையனைப் பற்றிய வீடியோவை அல்ல என ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

படேல் சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தவருபவர் ஹர்திக் படேல். குஜராத் மாநிலத்தில் அடுத்தமாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளார். இந்த முறை படேல் சமூகத்தினர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கவேண்டாம் , காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் அவர் ஒரு பெண்ணுடன் உள்ளதைப் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹர்திக் படேல், பாரதிய ஜனதா கட்சி தனது பெயரை கெடுப்பதற்காக இந்த வீடியோவை வெளியிட்டதாக குற்றம் சாட்டினார்.அது போலி வீடியோ என்றும் அவர் கூறியிருந்தார்.

ஹர்திக் படேல் சவால்

பாரதிய ஜனதா கட்சி அவதூறு வீடியோவை வெளியிட்டதன் மூலம் குஜராத் பெண்களை அவமானப்படுத்தியுள்ளதாக ஹர்திக் படேல் விமர்சித்தார். பாரதிய ஜனதா கட்சி அழுக்கு அரசியலை நடத்துவதாகவும்அவர்குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், ஹர்திக் படேல் மது அருந்துவது போல ஒரு புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹர்திக் படேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றிய வீடியோவைப் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்களே ஒழிய, 22 வயது பையனைப் பற்றிய வீடியோவை அல்ல .

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios