உத்தரப்பிரதேசத்தில் ஒரு கட்சிக்கு பணம் வேண்டும், மற்றொரு காட்சிக்கு இழந்த ஆட்சி வேண்டும்; மூன்றாவது கட்சிக்கு பிள்ளைகளும், குடும்பமும் வேண்டும். உத்தரப்பிரதேச மக்கள் தேர்தலில் சாதிப் பாகுபாடுகளைக் கடந்து வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகப் பேசினார்.

தேர்தல் கூட்டம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல்  பிரசாரமான மகா பரிவர்த்தன் கூட்டம் முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது.

லக்னோ நகரில் நேற்று நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது-

எதிரும்புதிரும்

இந்த மாநிலத்தில் உள்ள பகுஜன்சமாஜ் , சமாஜ்வாதி கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து மக்கள் பார்த்து இருக்கிறீர்களா?.  சமாஜ்வாதியை சூரிய உதயம் என்றால், பகுஜன்சமாஜ் சூரிய அஸ்தமனம் எனலாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரானவர்கள். அப்படி இருப்பவர்கள், பல ஆண்டுகளுக்குப் பின், என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால், மோடி உங்களின் பணத்தை மாற்றவைத்து, கருப்பு பணத்தை அகற்றாமல் விடமாட்டேன்.

3 கட்சிகள்

ஒரு கட்சி இங்கு காலூன்ற(காங்கிரஸ்) இங்கு கடந்த 15 ஆண்டுகளாக கடும் முயற்சி செய்து வருகின்றது. மற்றொரு கட்சி தன்னிடம் உள்ள பணத்தை பெருக்குவதிலேயே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது(பகுஜன்சமாஜ்). மூன்றாவதாக ஒரு கட்சி தனது பலத்தை எல்லாம் முழுமையாகப் பயன்படுத்தி, குடும்பத்தின் எதிர்காலத்தை சிறப்பாக்க பாடுபட்டு வருகிறது(சமாஜ்வாதி).

முடிவு எடுங்கள்

இப்படி பணத்தை பாதுகாக்கும் கட்சித்தலைவர்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தை பாதுகாப்பார்களா? ,முழுவதும் குடும்ப உறுப்பினர்களால் நிரம்பியுள்ள ஒரு கட்சியால் மாநிலத்தை பாதுகாக்க முடியுமா? என்பது பற்றி மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

கேள்வி

சிலர் பணத்தை பாதுகாக்கிறார்கள்; சிலர் குடும்பத்தை பாதுகாக்கிறார்கள்; ஆனால், யார் உத்தரப்பிரதேசத்தை பாதுகாக்கப்போகிறார்கள்?

சூழல் மாறும்

 வளர்ச்சியை அடிப்படையாக வைத்து அரசியல் செய்து வரும் ஆளும் கட்சிக்கு, மத்திய அரசு உதவி செய்தும், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய நேரம் கிடைக்கவில்லை. கடந்த 14 ஆண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சி புறந்தள்ளப்பட்டுவிட்டது. விரைவில் அந்த சூழல் மாறும்.

சாதியை மறக்க வேண்டும்

இந்த மாநிலத்தின் மக்கள் சாதி அரசியலையும், குடும்ப            அரசியலையும் ஏற்கனவே பார்த்துவிட்டார்கள். சாதி அரசியலை விட்டு மக்கள் மேல் எழுந்து, மாநிலத்தில் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காக மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

வருத்தம்

பொருளாரத்தில் சிறந்த மேதையை பீமாராவ் அம்பேத்கர் குறித்த ஆப்ஸ் அறிமுகப்படுத்தியபோது சிலர் மிகவும் வருத்தப்பட்டனர். எதற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டும். மோடி பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு கொடுக்கிறார் என்பதால் வருத்தப்படுகிறார்கள்.

ஊழல் ஒழிப்பு

நாட்டில் இருந்து ஊழல், கருப்புபணம் முழுமையாக ஒழிக்கப்படும் வரை எனது அரசின் போர் தொடரும். அதற்கு உத்தரபிரதேச மாநிலமக்களின் ஆதரவும், ஆசியும் வேண்டும். 

எஜமானர்

மத்தியஅரசு தனது சொந்தமாக அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. எங்களின்எஜமானார் மக்கள் மட்டும்தான். கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக இது நடந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து உத்திரப்பிரதேச வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் நிதிக் கமிஷன் வாயிலாக ரூ. ஒரு லட்சம் கோடி வழங்கி இருக்கிறோம். ஆனால்,முறையாக பயன்படுத்தப்படவில்லை. ஆளும் அரசு மாநில வளர்ச்சியில் முக்கியத்துவம் அளித்து செயல்படவில்லை.

முக்கியமல்ல

பாரதியஜனதா கட்சித் தொண்டர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது விஷயமல்ல. இந்த தேர்தலில் நாம் தகுதியானவர்களாக, அடுத்த இடத்தை நோக்கி நகர்கிறோமா என்பதற்கான பொறுப்பை வழங்கி இருக்கிறது. ஒற்றுமையோடு இருப்போம், அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி நகர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.