Asianet News TamilAsianet News Tamil

மணிப்பூர் கலவரம் :தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு

manipur crisis
Author
First Published Dec 24, 2016, 3:05 PM IST


மணிப்பூர் மாநிலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை குறித்து ராணுவத் தலைமை தளபதி தல்பீர் சிங் பார்வையிட்டார்.

மணிப்பூர் மாநிலத்தில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது.

manipur crisis

இதனை எதிர்த்து கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பினர், மணிப்பூர் முழுவதும் காலவரையற்ற பொருளாதார முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக பயங்கரவாதிகளும் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மணிப்பூர் மாநிலத்துக்கு உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நாகா கவுன்சிலின் முற்றுகை போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினர் மீது இம்பால் கிழக்கு மாவட்ட பொதுமக்கள், பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்  பல இடங்களில் வன்முறை வெடித்தது.

அப்போது ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக இம்பால் கிழக்கு மாவட்ட ஆட்சியர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இதனிடையே, சில இடங்களில் அமைதி நிலை திரும்புவதால், Lamlong பாலத்தில் இருந்து Pangei பகுதி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை குறித்து ராணுவத் தலைமை தளபதி தல்பீர் சிங் பார்வையிட்டார் 

Follow Us:
Download App:
  • android
  • ios