உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 133-வது இடத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11 இடங்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது? என்ற ஆய்வை ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு சில மாதங்களாக நடத்தி வருகிறது.

உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்பது குறித்து ஆன்லைன் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவகைகளைக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில பின்லாந்து நாட்டு மக்கள்தான் அதிக சந்தோஷத்துடன் வாழும் மக்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டை அடுத்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த ஆய்வில் 155 நாடுகள் இடம் பெற்றன. அதில் இந்தியாவுக்கு 133-வது இடமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் 122 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்த வருடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா 11 இடங்கள் பின் தங்கி 133-வது இடத்தைப் பெற்றுள்ளது.